BB Tamil 7
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் பல்வேறு புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீசன் என்றால் அது தற்போது நடைபெற்று வரும் 7வது சீசன் தான். இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக பிக்பாஸ், சுமால்பாஸ் என இரண்டு வீடுகளுடன் நடத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி போட்டியாளார்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.
Bigg Boss Tamil season 7
அந்த வகையில் அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, அன்ன பாரதி, பிராவோ ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக சென்ற நிலையில், அதில் அன்ன பாரதி, கானா பாலா ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டனர். தற்போது 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதுதவிர முதலில் இருந்து ஆடி வரும் 11 போட்டியாளர்களும் அவர்களுடன் அனல்பறக்க மோதி வருகின்றனர்.
Pradeep
இவர்கள் பஞ்சாயத்தே இன்னும் முடியாத நிலையில், தற்போது போட்டியாளர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் பிக்பாஸ். அதன்படி மேலும் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் டுவிஸ்ட் என்னவென்றால் அவர்கள் மூவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மூவருடன் போட்டியிடுவார்கள்.
vinusha, Aishu
அந்த போட்டியில் வைல்டு கார்டாக உள்ளே வரும் 3 பேர் ஜெயித்துவிட்டால் அவர்களுடன் போட்டியிட்ட 3 பேரும் வெளியே அனுப்பப்படுவார்களாம். இதனால் பிக்பாஸின் இந்த அறிவிப்பு போட்டியாளர்களுக்கு மரண பயத்தை கொடுத்துள்ளது. தற்போது வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள மூன்று போட்டியாளர்கள் யார் என்கிற தகவலும் கசிந்துள்ளது.
bigg Boss contestants
அதன்படி அவர்கள் புதிய போட்டியாளர்கள் இல்லையாம். இதற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்களில் இருந்து மூவரை தான் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப உள்ளார்களாம். இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் அவர் மீண்டும் வர வாய்ப்பில்லை. அதேபோல் பவா செல்லதுரையும் பாதியிலேயே வெளியேறியதால் அவரும் வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஐஷூவும் மீண்டும் வர வாய்ப்பில்லையாம்.
எஞ்சியுள்ள அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்ன பாரதி ஆகியோரில் மூவர் தான் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வர உள்ளார்களாம். இதில் அனன்யா ராவ், விஜய் வர்மா, வினுஷா ஆகியோர் உள்ளே வர அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... திரிஷா குறித்து கொச்சை பேச்சு... மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை