ரவீணா ஏன் பிரதீப்பை குற்றம்சாட்டினார்..? பிக்பாஸ் வீட்டில் Safety இல்லையா.? ரவீணாவின் தாய் பேட்டி..

First Published | Nov 9, 2023, 2:07 PM IST

பிரதீப் வெளியேறியதில் இருந்தே இதுதொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது.

பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட பிரதீப் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூல் சுரேஷை தகாத வார்த்தைகளில் பேசிய விவகாரத்தில் உரிமைக்குரல் எழுப்பிய போட்டியாளர்கள் நிலையில், பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டியதால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

Bigg Boss Pradeep

பிரதீப் வெளியேறியதில் இருந்தே இதுதொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. பலரும் நியாமற்ற எவிக்‌ஷன் என்று கூறி, கமல்ஹாசன் நடுநிலையாக முடிவெடுக்கவில்லை எனவும் விமர்சித்து வருகின்றனர்.

Tap to resize

Raveena

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிய போட்டியாளர்களில் ஒருவரான ரவீனாவின் தாய் பிரபல யூ டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேமராக்கள் இருப்பதால் அருணாக்கயிறை உள்ளே போடும் படியே பிரதீப் ரவீணாவிடம் கூறியதாக யுகேந்திரன் கூறியது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரவீனாவின் தாய் “ அருணாக்கயிறு குறித்து பிரதீப் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. ஆனால் பிரதீப் கூறிய வேறு சில கமெண்ட் குறித்து ரவீனா விசித்ராவிடம் கூறியதாக தெரிவித்தார்.

BB Tamil 7

மேலும் ரவீணா சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு பிரதீப் பற்றி தவறாக கூறிய வீடியோ குறித்து பேசிய ரவீணாவின் தாய் “ பூர்ணிமா தன்னை பற்றி பிரதீப் கூறிய விஷயம் குறித்து பிரதீப்பிடம் பேசி முடிஉக்கு கொண்டுவந்தார். ஆனால் இந்த விஷயத்தை ரவீணாவிடம் பூர்ணிமா சொல்லாமல் இருந்திருக்கலாம். எனவே ரவீணா பிரதீப் பற்றி தவறாக விசித்ராவிடம் கூறியிருக்கலாம்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ மணி இல்லை எனில் ரவீணாவின் கேம் மிகவும் சிறப்பாக இருக்கும். மணி அட்வைஸ் செய்கிறேன் என்ற பெயரில் அதிகமாக ரவீணாவை கண்ட்ரோல் செய்கிறார். கண்ட்ரோல் செய்வது அல்லது அட்வைஸ் செய்வதை மணி குறைத்துக்கொண்டால் ரவீணாவின் கேம் சிறப்பாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.

நிக்சன் – ஐஷு குறித்து பேசிய அவர் “ இருவரும் கண்டெண்ட்க்கா பன்றோம் என்று சொல்லிதான் செய்கின்றனர்” என்று தெரிவித்தார். பிரதீப்க்கு விசித்ராவும், அர்ச்சனாவும் ஆதரவு தெரிவிப்பது குறித்து பேசிய ரவீணாவின் தாய் “ பிரதீப் உடன் இருப்பது பாதுகாப்பற்றது என்று சொல்ல முடியாது. அவர் தவறாக பேசுவார், மோசமான ஜோக்களை அடிப்பார்.. ஆனால் அதற்காக ரெட் கார்டு கொடுக்காமல், எச்சரித்திருக்கலாம்” என்று கூறினார்

Latest Videos

click me!