பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐஷூ, நிக்சன் இருவரும் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், ஐஷூவின் தாய் போட்ட உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் காதல் உருவாவது சகஜமான ஒன்று தான். முதல் சீசனில் இருந்து நடந்து முடிந்த 6-வது சீசன் வரை அனைத்து சீசன்களிலும் ஏதேனும் ஒரு காதல் ஜோடி ரொமான்ஸ் செய்வதை பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் 7-வது சீசன் அதில் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. இந்த சீசனில் போட்டி போட்டு காதலித்து வருகிறார்கள். முதலில் ரவீனா - மணி இருவரும் லவ் டிராக்கை தொடக்கி வைக்க அதில் தற்போது நிக்சனும், ஐஷூவும் இணைந்துவிட்டனர்.
24
Aishu, Nixen
ஆரம்பத்தில் முதல் இரு வாரங்கள் நிக்சன், ஐஷூ இருவரும் தனித்தனியாக கேம் விளையாடிய விதம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவர்கள் பைனல் வரை செல்வார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்கள் போகப் போக இருவரும் காதல் வலையில் சிக்கினர். நிக்சனை ஐஷூ தம்பி, தம்பி என அழைத்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து ரொமான்ஸ் செய்து வருகிறார் நிக்சன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
ஐஷூ தனக்கு ஏற்கனவே வெளியில் ஆள் இருக்கிறார் என்றும் ஓப்பனாகவே கூறி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை கேமுக்காக இப்படி நிக்சனை காதலிப்பது போல் ஏமாற்றுகிறாரா என ஐஷூ மீது சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். ஐஷூ நிக்சன் உடன் நெருங்கி பழக ஆரம்பித்ததில் இருந்து அவரைப்பற்றி பதிவிடுவதை அவரது பெற்றோர் நிறுத்திவிட்டனர். இதனால் ஐஷூ மீது அவர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
44
Aishu Mother insta story
இந்த நிலையில், ஐஷூவைப்பற்றி அவரது தாய் ஷைஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார். அதில் எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷூ. இந்த ஐஷூ வேண்டாம், நாங்கள் எங்களுடைய ஐஷூவை பார்க்க விரும்புகிறோம். உண்மையான கண்கள் எது, உண்மையான பொய் எது என நீ உணர்வாய் என நம்புகிறேன்” என அந்த பதிவில் உருக்கமாக குறிப்பிடப்பட்டு உள்ளது.