பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு துரத்திய கமலுக்கு ரெட் கார்டை வைத்தே தரமான பதிலடி கொடுத்த பிரதீப் - வைரல் photo

First Published | Nov 6, 2023, 8:44 AM IST

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து தன்னை வெளியேற்றிய கமலுக்கு பிரதீப் ஆண்டனி சூசகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Pradeep Antony

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக பவா செல்லதுரை வெளியேறியதால், இரண்டாவது வாரத்தில் எவிக்‌ஷனின்றி போட்டியாளர்கள் தப்பித்தனர். பின்னர் மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா எலிமினேட் ஆனார்.

pradeep red card

இதையடுத்து நான்காவது வாரம் தான் மிகப்பெரிய டுவிஸ்ட் காத்திருந்தது. ஏனெனில் அந்த வார இறுதியில் பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை ஒரே நேரத்தில் உள்ளே அனுப்பி அதிர்ச்சி கொடுத்தனர். அதுமட்டுமின்றி அந்த வாரம் டபுள் எவிக்‌ஷனும் நடைபெற்றது. அதனால் யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இப்படி போகப்போக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது பிக்பாஸ்.

Tap to resize

Bigg Boss Pradeep

ஒவ்வொரு சீசனிலும் மக்களின் மனம்கவர்ந்த போட்டியாளர் என ஒருவர் இருப்பார். அந்த வகையில் இந்த 7-வது சீசனில் மக்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக பிரதீப் ஆண்டனி இருந்து வந்தார். இவரை சக போட்டியாளர்களுக்கு பிடிக்காவிட்டாலும், மக்கள் தந்த பேராதரவு அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை திட்டமிட்டு வெளியேற்ற முடிவெடுத்த அவர்கள் பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பினர்.

Pradeep, Kamalhaasan

அப்போது அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர். அவர்களின் புகார்களை ஏற்றுக்கொண்ட கமல், அதற்கு பிரதீப் பதிலளிக்க கூட வாய்ப்பு கொடுக்காமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். அவரின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது. கமலின் முடிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Pradeep reply to kamal

பிக்பாஸ் வீட்டில் தன்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி வெளியேற்றிய கமலுக்கு ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் தரமான பதிலடி கொடுத்துள்ளார் பிரதீப். சுற்றி பெண்கள் நிற்க, கமல் கொடுத்த ரெட் கார்டை கையில் வைத்துக் கொண்டு செம்ம ஹாப்பியாக போஸ் கொடுத்துள்ளார் பிரதீப். என்னால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைனு சொன்னவர்களுக்கு பெண்கள் புடைசூழ போஸ் கொடுத்து பதிலடி கொடுத்திருக்கிறார் பிரதீப்.

Pradeep Red card celebration

அதேபோல் மற்றொரு புகைப்படத்தில் பிக்பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் கையில் பிடித்தபடி, தனது நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் உற்சாகம் பொங்க போஸ் கொடுத்திருக்கிறார் பிரதீப். அவரின் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  ரேகாவை பலவந்தமா லிப்கிஸ் அடிச்ச நீங்கல்லாம் பெண்கள் உரிமை பற்றி பேசலாமா? கமலை கழுவிஊற்றிய யுகேந்திரன் மனைவி

Latest Videos

click me!