தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கினாரா கமல்? ரெட் கார்டு சர்ச்சையால் சீறும் நெட்டிசன்ஸ்

First Published | Nov 5, 2023, 11:14 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்றியது கமலின் அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

kamalhaasan

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே அனுப்பப்பட்டனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடுபிடித்துக் கொண்டே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் நடிகர் கவினின் நண்பரான பிரதீப் ஆண்டனியும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

Pradeep Antony

பிக்பாஸ் வீட்டின் விதிகளை முறையாக தெரிந்துகொண்டு தெளிவாக விளையாடி வந்த பிரதீப்புக்கு நாளுக்கு நாள் ஆதரவும் அதிகரித்து வந்தது. இது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சிலருக்கும் பெரும் தலைவலியாக மாறியது. குறிப்பாக மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் பிரதீப்புக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் கைதட்டல்களை பார்த்து கடுப்பானார்கள். இதனால் இருவரும் திட்டம்போட்டு சக போட்டியாளர்களிடம் பேசி பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்ப முடிவெடுத்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos


Pradeep, Kamalhaasan

அதன்படி நேற்றைய எபிசோடில், பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பிய போட்டியாளர்கள், பெரும்பாலும் அவர் மீது முன்வைத்த குற்றச்சாட்டு என்னவென்றால் அவரால் இந்த வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான். அவர்களின் குற்றச்சாட்டை பரிசீலித்த கமல், பிரதீப்புக்கு ரெட் காட்டு கொடுக்க முடிவு செய்தார். இதன்காரணமாக இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

Netizens comment

பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. பிக்பாஸ் மேடையில் அவ்வப்போது அரசியல் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ள கமல், நேற்று பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்னர், பிக்பாஸ் வீட்ல மட்டுமில்ல, நாட்லையும் பெண்களுக்கு எதிராக ஏதாவது நடந்ததென்றால் தட்டிக்கேட்பேன் என கூறினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கமல் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கிவிட்டதாக சாடி வருகின்றனர்.

மேலும் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காத கமல் அரசியலுக்கு சுத்தமாக லாயக்கு இல்லாதவர் என்றும் விமர்சித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவனை பேசவே விடாமல் மக்களுக்கு கேட்க நேரமில்லை என்று சொன்னபோதே இதில் அரசியல் இருப்பது உறுதியானதாக தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். மறுபுறம் பிரதீப்புக்கு ஆதரவாகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கமலின் இந்த முடிவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி-க்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஒன்னு அவன் இருக்கனும்... இல்ல நான் இருக்கனும்! பிரதீப்பால் பிக்பாஸில் இருந்து வெளியேற முடிவெடுத்த கமல்ஹாசன்

click me!