பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனும் முதல் வாரத்தில் இருந்தே பல்வேறு அனல்பறக்கும் விவாதங்கள் மற்றும் சண்டைகளோடு சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க போட்டியாளராக பிரதீப் இருந்து வந்தார். தற்போது அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தான் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
24
Pradeep Kavin friendship
பிக்பாஸ் நிகழ்ச்சி வரலாற்றில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் இரண்டாவது போட்டியாளர் பிரதீப். இதற்கு முன் மகத் அடிதடியில் இறங்கியதற்காக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதையடுத்து தற்போது பிரதீப், பெண்களிடம் முகம் சுளிக்கும் வகையில் பேசியதற்காகவும், அவரால் அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறியும் அவரை அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி உள்ளார் கமல்ஹாசன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிரதீப்பை இப்படி திடீரென வெளியே அனுப்பி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. விசித்ரா சொன்னது போல் அவரை எச்சரித்து, அவருக்கு ஒரு சான்ஸ் கொடுத்திருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. பிரதீப்புக்கு எதிராக கமல் எடுத்த இந்த முடிவு முற்றிலும் தவறானது என சமூக வலைதளங்களில் எதிர்ப்பு குரல் எழ தொடங்கி உள்ளன.
44
Kavin post about Pradeep
அந்த வகையில் பிரதீப்பின் நெருங்கிய நண்பரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான கவினும் பிரதீப்புக்கு ஆதரவாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், உன்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு, எப்போதுமே நீ எப்படிப்பட்டவன் என்பதி தெரியும் என குறிப்பிட்டு பிரதீப் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் கவின் விளையாடியபோது அங்கே கெஸ்ட் ஆக வந்த பிரதீப் அவரை அறைந்தாலும் தற்போது அவரை அரவணைக்கும் விதமாக கவின் போட்டுள்ள பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் பிரெண்ட்ஷிப்பை பாராட்டி வருகின்றனர்.