ஓவர் ரொமான்ஸ் உடம்புக்கு ஆகாது... காதல் ஜோடியை பிரிக்க முடிவெடுத்த ரசிகர்கள் - இந்த வார எலிமினேஷன் இவர்தானா?

First Published | Nov 3, 2023, 8:44 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் ஆக உள்ள போட்டியாளர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என 18 பேர் களமிறக்கப்பட்டனர். இதில் முதல் வார இறுதியில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். இதற்கு மறுதினமே உடல்நலக்குறைவு காரணமாக பவா செல்லதுரை வெளியேறினார். அதனால் இரண்டாவது வார இறுதியில் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை.

wildcard contestants

பின்னர் மூன்றாவது வாரத்தில் விஜய் வர்மா எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து நான்காவது வாரம் தான் பல்வேறு டுவிஸ்டுகள் நிறைந்த வாரமாக இருந்தது. அந்த வாரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக டபுள் எவிக்‌ஷன் என அறிவித்த கமல்ஹாசன், வினுஷா மற்றும் யுகேந்திரனை எலிமினேட் செய்தார். அதுமட்டுமின்றி அந்த வார இறுதியில் கானா பாலா, அன்ன பாரதி, அர்ச்சனா, தினேஷ் மற்றும் பிராவோ என 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

aishu, nixen

வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் கடுப்பான பிக்பாஸ் போட்டியாளர்கள் அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்து, 5 பேரையும் தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பியதோடு, அவர்கள் 5 பேரையும் பிளான் போட்டு நாமினேட்டும் செய்தனர். அவர்கள் பதிலுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள மாயா, ஐஷூ, அக்‌ஷயா, மணி ஆகியோரை நாமினேட் செய்தனர். 

Aishu

இந்த நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் விவரம் கசிந்துள்ளது. அதன்படி காதல் கண்டெண்ட்டால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வரும் ஐஷூ தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அக்‌ஷயா உள்ளார். இவர்களோடு கானா பாலா மற்றும் அன்ன பாரதி ஆகியோருக்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இவர்கள் நால்வருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஐஷூ கடைசி இடத்தில் உள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராத்தை எதிர்பாருங்கள் எனக்கூறி வேறு யாராவது கூட எலிமினேட் செய்யப்படலாம். ஆனால் இந்த வாரம் இந்த நால்வரில் ஒருவர் எலிமினேட் ஆகப்போவது மட்டும் உறுதி.

இதையும் படியுங்கள்... எனக்கு Already ஆள் இருக்குனு ஐஷூ சொன்னது இந்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரையா? அப்போ நிக்சன் நிலைமை?

Latest Videos

click me!