பிக்பாஸில் அலப்பறை கிளப்ப 5 பேர் ரெடி... அடடே இவங்க தான் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுக்கப்போறாங்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் ஒரே நேரத்தில் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

kamalhaasan

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா ஆகிய மூன்று போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இதனால் தற்போது அங்கு உள்ள போட்டியாளர்கள் எண்ணிக்கை 15 ஆக குறைந்து உள்ளது. அவர்களுக்கு இடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது.

Bigg Boss Tamil season 7 wild card entry

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஒரு புது குண்டை தூக்கிப் போட்டார் கமல்ஹாசன். அதன்படி, பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. வருகிற அக்டோபர் 29-ந் தேதி அந்த 5 போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கமல்ஹாசன் கூறினார். இதையடுத்து யார் அந்த 5 பேர் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize


KPY Bala, Manasi, Archana

சமீபத்திய தகவல்படி கலக்கப்போவது யாரு பாலா, கானா பாலா, மானசி, அர்ச்சனா, சாம் சாமுவேல் ஆகிய 5 பேர் தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளார்களாம். இதில் கலக்கப்போவது யாரு பாலா, மானசி, அர்ச்சனா ஆகிய 3 பேரும் விஜய் டிவியில் பணியாற்றியவர்கள் ஆவர். பாலா குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்பட பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதேபோல் மானசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஆவார்.

Sam Samuels, Gana Bala

விஜே அர்ச்சனாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்தவர் ஆவார். கானா பாலா அனைவரும் அறிந்த கானா பாடகர். அதேபோல் சாம் சாமுவேல்ஸ் என்பவர் ஒரு பைக் ரேஸர் ஆவார். இவர்கள் தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்ல உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த லிஸ்ட்டில் ஏதேனும் டுவிஸ்ட் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... பெருமிதம் கொள்கிறேன்!! விஜயதசமி நாளில்... FEMI9 எனும் புதிய தொழிலை பெண்களுக்காக துவங்கிய நயன்தாரா!

Latest Videos

click me!