பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் எப்படி சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காதோ அதேபோல் காதல் ஜோடிகளுக்கும் பஞ்சம் இருக்காது. பிக்பாஸ் முதல் சீசனில் டாப் போட்டியாளராக இருந்த ஓவியா, அந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வை துரத்தி துரத்தி காதலித்தார். ஆனால் ஆரவ், ஓவியாவில் காதலுக்கு நோ சொல்லிவிட்டதால், இந்த காதல் ஜோடி கைகூடாமல் போனது.
இதையடுத்து இரண்டாவது சீசனில் யாஷிகா ஆனந்த், மகத்தை உருகி உருகி காதலித்தார். ஆனால் மகத் தனக்கு ஏற்கனவே ஆள் இருப்பதாக கூறி யாஷிகாவை கழட்டிவிட்டார். மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா காதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் முடிந்ததும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.
24
Raveena Daha - manichandra
இதையடுத்து நான்காவது சீசனில் பாலா - ஷிவானி இடையே ஒரு லவ் டிராக் ஓடியது. ஷிவானியின் அம்மா கண்டித்ததால் அது அப்படியே காத்துவாக்குல கடந்துபோனது. பின்னர் ஐந்தாவது சீசனில் அமீர் - பாவனி இடையே காதல் உருவானது. அவர்கள் இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு இந்த ஜோடி திருமணமும் செய்துகொள்ள உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
ஆறாவது சீசனில் ஒரு ஒருதலைக் காதல் ஜோடியாக ஷிவின் - கதிரவன் இருந்து வந்தனர். ஷிவின் கதிரவனை ஒருதலைபட்சமாக காதலித்தார். ஆனால் கதிரவன் தன்னுடைய காதலியை அறிமுகப்படுத்தி ஷிவினின் காதலுக்கு எண்ட்கார்டு வைத்தார். இப்படி சீசனுக்கு ஒரு காதல் ஜோடியாவது உருவாகும் அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 7-வது சீசனில் மணி - ரவீனா இருவரும் காதல் ஜோடியாகவே உள்ளே வந்துள்ளனர்.
44
Bigg Boss contestants Aishu and nixen
அவர்கள் இருவரும் காதலிப்பதை அறிவிக்காவிட்டாலும் அவர்கள் செய்யும் வேலைகளை வைத்து சக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்டுபிடித்துவிட்டனர். அந்த லவ் ஜோடி ஒருபக்கம் ரொமான்ஸ் செய்ய, மறுபக்கம் இன்னொரு லவ் ஜோடி உருவாகி இருக்கிறது. அது வேறுயாருமில்லை நிக்சன் - ஐஷூ ஜோடி தான். இருவரும் தற்போது தான் படிப்படியாக ரொமான்ஸ் செய்ய தொடங்கி உள்ளனர். இதைப் புரோமோவாகவே வெளியிட்டு பிக்பாஸ் டீமும் உறுதி செய்துவிட்டது. இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இது பிக்பாஸ் வீடா இல்ல லவ்வர்ஸ் பார்க்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.