கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல்பறந்தது. சண்டைகளும், சர்ச்சைகளும் நிறைந்திருந்த முதல் வாரத்தின் இறுதியில் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.
24
Bigg Boss Bava chelladurai
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அனன்யாவை எலிமினேட் செய்யும் முன்னர் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் யார் வெளியே செல்வார் என்பதை யூகத்தின் அடிப்படையில் சொல்லச் சொன்னார். இதில் பெரும்பாலானோர் பவா செல்லதுரை பெயரை தான் சொன்னார்கள். ஒரு சிலர் பிரதீப் வெளியேறுவார் என கூறினர். மற்றபடி யாருமே அனன்யா பெயரை சொல்லவில்லை. ஆனால் மக்கள் தீர்ப்பே இறுதியானது எனக்கூறி அனன்யாவை எலிமினேட் செய்தார் கமல்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இந்த நிலையில், தற்போது திடீர் டுவிஸ்ட் ஆக எழுத்தாளர் பவா செல்லதுரை தற்போது திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். முதற்கட்ட தகவல்படி அவர் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் அவர் சொல்லிய ஒரு சில கதைகளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிகவும் டஃப் ஆன போட்டியாளராக பவா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
44
Bava chelladurai Leaves Bigg Boss house
ஆனால் அவர் ஒரே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. ஒரு சிலரோ அவரின் இந்த முடிவை விமர்சித்தும் வருகின்றனர். அவர் ஒரு நாள் முன்னதாக இந்த முடிவை எடுத்திருந்தால், நேற்று அனன்யா எலிமினேட் ஆகி இருக்க மாட்டார் என்றும், நல்ல வாய்ப்பை வீணடித்துவிட்டதாக கூறி வருகின்றனர். அனன்யாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வருமாறும் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.