பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் எழுத்தாளர் பவா செல்லதுரை. பிக்பாஸில் தினசரி விதவிதமான கதைகளை சொல்லி போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பவா செல்லதுரை மீது திருட்டு புகார் ஒன்று எழுந்துள்ளது. பவா செல்லதுரை தன்னுடைய கவிதையை திருடிவிட்டதாக சேலத்தை சேர்ந்த கவிஞர் பழ புகழேந்தி முகநூல் பக்கத்தில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்து உள்ளார்.
24
Bigg boss Bava chelladurai
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “பவா.செல்லதுரை மற்றும் பேரா.வே.நெடுஞ்செழியன் இருவரும் இணைந்து தொகுத்த நூல் ’சிறகிசைத்த காலம்’. பிரபலங்களின் பள்ளி வாழ்க்கையைப் பற்றி அவர்களிடமே கேட்டு வாங்கி தொகுக்கப்பட்ட நூல். அதன் முதல் பக்கத்தில் எனது ’கரும்பலகையில் எழுதாதவை’ தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனது பெயரோ, தொகுப்பின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
"பிள்ளைகளே" என்று நான் எழுதியிருந்ததை "மாணவர்களே" என்று மாற்றிக் கொண்டதாலேயே அது என்னுடைய கவிதை இல்லையென்றாகிவிடாது. 2003இல் முதல் பதிப்பு வந்த போதே இது என் கவனத்துக்கு வந்திருந்தாலும் நான் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. கல்வி சார்ந்த சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு என் எழுத்து பயன்படுகிறது என்கிற சிறிய மகிழ்ச்சி இருந்தது எனக்கு.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
ஆனால், தற்போது பிக்பாஸில் பவா பேசியதாக அறியப்படுகிற செய்திகள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளன. கல்வி அவசியமில்லை என்கிற கருத்தை உடைய ஒருவர் ’சிறகிசைத்த காலம்’ போன்ற நூலைத் தொகுக்க வேண்டிய அவசியமென்ன? எல்லாமே வெற்று விளம்பரங்களுக்கான செயல்பாடுகள்தானா? என்கிற கேள்வி எழுவதாக கூறி உள்ள பழ புகழேந்தி, "சிறகிசைத்த காலம்" நூலின் முதல் பக்கமும், "கரும்பலகையில் எழுதாதவை" நூலில் தான் எழுதிய கவிதையையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
44
Pazha pugazhenthi FB post
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பவா செல்லதுரை மோசடி செய்துள்ளதாக கமெண்ட்டில் கண்டனங்களை பதிவிட்டிருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள பழ புகழேந்தி, அது இரண்டு பேர் சேர்ந்து தொகுத்த நூல். அதில் ஒருவரை மட்டும் குற்றவாளியாக்க வேண்டாம். அக்கவிதை மனதில் தங்கிப் போய், மனதில் இருந்து அவர்கள் அதை எடுத்தாண்டு இருக்கலாம். சில சொற்கள் மாறியிருப்பதற்குக் காரணம் அதுவாகக் கூட இருக்கலாம். ஆயினும், படைப்பாளனுக்குரிய அடையாளத்தை மறைத்திருக்கக் கூடாது என்பதில் சிறு வருத்தமுண்டு. என் கோபம் அவரது தற்போதைய கருத்து குறித்தது” என ரிப்ளை செய்துள்ளார். பழ புகழேந்தியின் இந்த பதிவால் பவா செல்லதுரை சர்ச்சையில் சிக்கி உள்ளார்.