அப்பாஸ் முதல் ரேகா நாயர் வரை... பக்காவாக ரெடியான 18 பேர் - பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்கானது

First Published | Aug 28, 2023, 10:05 AM IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

BiggBoss Tamil Season 7

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகளவில் பேமஸ் ஆன இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுக சீசனே வேறலெவலில் ஹிட் ஆனது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விதம், ஓவியா ஆர்மி என முதல் சீசனே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதால் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை தவறாமல் நடத்தி வருகின்றனர்.

kamalhaasan

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. அநேகமாக வருகிற அக்டோபர் 1-ந் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெளியான புரோமோ மூலம் இந்த ஆண்டு 2 வீடுகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை எந்த ஒரு மொழியிலும் இப்படி நடத்தப்பட்டதில்லை என்பதால் இந்த சீசன் இன்னும் கூடுதல் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Sharmila

இந்த நிலையில், பிக்பாஸ் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி சமூக வலைதளங்கள் மூலம் பாபுலர் ஆன கோவையை சேர்ந்த முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஆன ஷர்மிளா இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்க உள்ளாராம். பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு அவர் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Abbas, Prithveeraj, Sonia Agarwal

இதேபோல் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களான அப்பாஸ் மற்றும் பப்லு பிருத்விராஜ் ஆகியோரும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் நடிகை சோனியா அகர்வாலும் பங்கேற்க உள்ளாராம்.

Ammu Abhirami, Santhosh Prathap, Dharsha Gupta

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் நடிகை அம்மு அபிராமியின் பெயர்களும் பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் அடிபடுகிறது. அதோடு குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியாளரான தர்ஷா குப்தாவும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சுதந்திர தினத்தில் Youtubeல் வெளியான ஹே ராம்.. "படைத்த புதிய சாதனை" - 23 ஆண்டுகள் கழித்தும் மவுசு குறையவில்லை!

rakshan jacqueline, Rachitha Dinesh

இதுதவிர விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக பணியாற்றி தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜே ரக்‌ஷன் மற்றும் விஜே ஜாக்குலின் ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்க வாய்ப்புள்ளது. அதேபோல் கடந்த சீசனில் கலந்துகொண்ட நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷும் இந்த சீசனில் பங்கேற்பார் என கூறப்படுகிறது.

VJ Parvathy, Rekha Nair, Ranjith

கடந்த ஆண்டே பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற விஜே பார்வதி மற்றும் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் இந்த சீசனில் நிச்சயம் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயரும் இந்த சீசனில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாம்.

Vignesh, Sridhar master, Mila

இதோடு காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமான விக்னேஷ் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் நடிகை ஷகீலாவின் மகளும் மாடல் அழகியுமான மிலா ஆகியோரும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளார்களாம். அவர்களோடு ரவிக்குமார் மற்றும் அகில் என்கிற புதுமுகங்களும் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... கவினின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி... நெல்சன் முதல் சிவகார்த்திகேயன் வரை படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

Latest Videos

click me!