பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக... இந்த சீசனில் ஒன்னில்ல 2 வீடு - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!

First Published | Aug 7, 2023, 3:29 PM IST

பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக விரைவில் தொடங்க உள்ள 7-வது சீசன், இரண்டு வீடுகளில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியை டிஆர்பி-யில் தூக்கி நிறுத்த உதவிவது ரியாலிட்டி ஷோக்கள் தான். அந்த வகையில் கடந்த 7 மாதங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதனால் வார இறுதி நாட்களில் விஜய் டிவியின் டிஆர்பி ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஆனால் கடந்த மாதம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டதால், தற்போது டிஆர்பி செம்ம அடி வாங்கி உள்ளது. இந்த டிஆர்பி-யை எகிற வைக்க தான் விரைவில் களமிறங்க உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை தமிழில் 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆறு சீசன்களுமே டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டுள்ளன. இந்த வரிசையில் 7-வது சீசனும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறது பிக்பாஸ் குழு.

இதையும் படியுங்கள்... விஜய், அஜித்தெல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாதபடி பாக்ஸ் ஆபிஸில் ரஜினி படைத்துள்ள டாப் டக்கர் சாதனைகள்

Tap to resize

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரு மாதங்களே உள்ளதால், தற்போது அந்நிகழ்ச்சிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக போட்டியாளர்கள் தேர்வு ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வர, மறுபுறம் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறதாம். இந்த ஆண்டு நடைபெறும் பிக்பாஸ் 7-வது சீசனில் சில ஆச்சர்யங்களும் அரங்கேற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த சீசனில் 2 பிக்பாஸ் வீடுகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரித்து இரண்டு வீட்டில் அடைக்க உள்ளார்களாம். சில வாரங்கள் கழித்து இரண்டு வீட்டில் உள்ள போட்டியாளர்களும் ஒரே வீட்டில் போட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுவரை எந்த மொழியிலும் இதுபோன்று நடந்ததில்லை. தமிழ் பிக்பாஸ் குழுவின் இந்த முயற்சி சக்சஸ் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... மருமகனா இல்லேனா என்ன... என்றைக்குமே சூப்பர்ஸ்டார் ரசிகன் தான்! ஜெயிலர் ரஜினி குறித்து தனுஷ் போட்ட டுவிட் வைரல்

Latest Videos

click me!