வெளிநாட்டில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்டது இந்தியில் தான். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிகளை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அங்கு 15 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அவதாரம் எடுத்த கமல்ஹாசன், கடந்த 6 ஆண்டுகளாக அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனிலேயே மிகவும் பேமஸ் ஆகிவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தான். குறிப்பாக ஓவியா அந்த ஒரே சீசனில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவருக்கென டுவிட்டரில் ஆர்மி எல்லாம் தொடங்கப்பட்டு ரசிகர்கள் கொண்டாடினர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த பெயரும், புகழும் வேறு எந்த நடிகர், நடிகைக்கும் கிடைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... Maaveeran Review : மாவீரனாக மாஸ் காட்டினாரா சிவகார்த்திகேயன்? விமர்சனம் இதோ
ஆனால் அந்த பெயரையும், புகழையும் சரிவர பயன்படுத்தாததால் ஆளே அட்ரெஸ் இல்லாமல் போய்விட்டார் ஓவியா. இதற்கு அடுத்தடுத்து நடைபெற்ற சீசன்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமாவில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் டைட்டில் வின்னர்களான ஆரவ், ஆரி, ராஜு, ரித்விகா, அசீம், முகென் ராவ் ஆகியோரும் பெரியளவில் சினிமாவில் சோபிக்கவில்லை.
இதுதான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனுக்கு பிரச்சனையாக வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் பேமஸ் ஆவதை விட பெயர் தான் அதிகளவில் டேமேஜ் ஆகிறது என்பதால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளம் நடிகைகள் பலர் ஆர்வம் காட்டவில்லை என தகவல் கசிந்துள்ளது. சம்பளம் அதிகம் கொடுத்தாலும் வேண்டவே வேண்டாம் எனக்கூறி வாய்ப்பை நிராகரித்துவிடுகிறார்களாம். இதனால் போட்டியாளர்கள் கிடைக்காமல் பிக்பாஸ் குழு திணறி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பிய சந்தானம்... கலகலப்பான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ டிரைலர் இதோ