தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை வெற்றிகரமாக 6 சீசன்கள் முடிவடைந்துள்ளன. இந்த 6 சீசன்களையுமே கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். இதில் விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக கடந்த மூன்று சீசன்களும் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடியும் வண்ணம் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லாததால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை மீண்டும் பழையபடியே ஜூலை மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... குழந்தை பிறந்த குஷியில் கோயில்... கோயிலாக சுற்றும் பிரபு தேவா! இப்போ எங்க போயிருக்காரு தெரியுமா?
அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் வருகிற ஜூலை மாத இறுதியில் தொடங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூலை மாதத்தின் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் முடிவடைந்துவிடும் என்பதால், அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம்.
கடந்த சீசனை விட இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கான ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு 2 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் 4 போட்டியாளர்களை பொதுமக்களிடம் இருந்து தேர்ந்தெடுத்து களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். இதனால் இந்த சீசன் களைகட்டும் போல தெரிகிறது.
இதையும் படியுங்கள்... நீச்சல் உடையில் போஸ்... சூப்பர் சிங்கர் பூஜா இதெல்லாம் பண்ணுவாங்களா... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்