பிக்பாஸில் ரேகா நாயர் மட்டுமில்ல... பயில்வானும் இருக்காராம்பா? அலப்பறை கிளப்ப தயாரான விஜய் டிவி

Published : Aug 24, 2023, 11:16 AM IST

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், அந்நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

PREV
14
பிக்பாஸில் ரேகா நாயர் மட்டுமில்ல... பயில்வானும் இருக்காராம்பா? அலப்பறை கிளப்ப தயாரான விஜய் டிவி
Bayilwan, Rekha Nair

தமிழ்நாட்டில் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் முதல் சீசனே மாபெரும் வரவேற்பை பெற்றதோடு டிஆர்பியிலும் அடிச்சுதூக்கியது. இதனால், ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான புரோமோவும் ஏற்கனவே வெளியாகி விட்டது.

24
BiggBoss Season 7

இதற்கு முந்தையை சீசன்களைவிட இந்த சீசன் பல்வேறு புதுமைகளுடன் அரங்கேற உள்ளது. அதில் ஒன்று தான் 2 வீடு கான்செப்ட். வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த முறை 2 வீடுகளில் நடத்தப்பட உள்ளதாம். இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோவும் அமைந்திருந்தது. இதுதவிர நிறைய மாற்றங்களும் இந்த சீசனில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சிறந்த நடிகருக்கான போட்டியில் சிம்பு - தனுஷ்... மீண்டும் மகுடம் சூடுவாரா சூர்யா? தேசிய விருது இன்று அறிவிப்பு

34
Rekha Nair

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வும் மறுபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே நடிகை ரேகா நாயரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதனிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

44
BiggBoss Season 7 contestants

ஏற்கனவே இரவின் நிழல் பட பிரச்சனையால் ரேகா நாயரும், பயில்வான் ரங்கநாதனும் பெசண்ட் நகர் பீச்சில் சண்டையிட்டதை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. எலியும், பூனையுமாக இருக்கும் அவர்கள் இருவரையும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்தால் நிச்சயம் களேபரம் கன்பார்ம் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. இது மட்டும் நடந்தால் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி நிச்சயம் எகிறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்... இல்லேனா என்ன ஆகிருக்கும்? ஓட்டல் ரூமில் இருந்த ரகசிய கேமராவை அலேக்காக தூக்கிய தமிழ் பட நடிகை

Read more Photos on
click me!

Recommended Stories