பவா செல்லதுரைக்கு முன்... ‘ஆள விடுங்க பாஸ்’னு சொல்லி பாதியிலேயே வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Published : Oct 09, 2023, 12:20 PM IST

ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய போட்டியாளர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
17
பவா செல்லதுரைக்கு முன்... ‘ஆள விடுங்க பாஸ்’னு சொல்லி பாதியிலேயே வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ
contestants who quits bigg boss show

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. வெற்றிகரமாக இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை ஒரே வாரத்தில் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இப்படி பாதியிலேயே வெளியேறுவது முதன்முறையல்ல. இதற்கு முன்னர் இப்படி பாதியிலேயே வெளியேறிய போட்டியாளர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

27
பிக்பாஸ் முதல் சீசன்

ஸ்ரீ

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீ. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்த ஒருசில தினங்களிலேயே தனக்கு செட் ஆகவில்லை எனக்கூறி பாதியிலேயே வெளியேறினார் ஸ்ரீ.

பரணி

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து பாதியில் வெளியேறிய மற்றொரு போட்டியாளர் பரணி. நாடோடிகள் படத்தில் நடித்து பிரபலமான பரணி, பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இரண்டு வாரம் மட்டுமே தாக்குப்பிடித்த பரணி, தன்னை அனைவரும் கார்னர் செய்கிறார்கள் எனக்கூறி பிக்பாஸிடம் தன்னை வெளியேற அனுமதிக்குமாறு கேட்டார். பிக்பாஸ் பதிலளிக்காததால் சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்றார் பரணி. பின்னர் பாதுகாப்பு கருதி அவரை அழைத்து வெளியேற்றினார் பிக்பாஸ்.

ஓவியா

பிக்பாஸ் முதலாவது சீசனில் இருந்து வெளியேறிய மூன்றாவது போட்டியாளர் ஓவியா. அந்த சீசன் பேமஸ் ஆனதற்கு முக்கிய காரணமாக இருந்த ஓவியா, மன அழுத்தம் காரணமாக வெளியேறினார். 41-வது நாளில் திடீரென நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ஓவியா பின்னர் பாதியிலேயே வெளியேறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

37
பிக்பாஸ் மூன்றாவது சீசன்

சரவணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற சரவணன், அந்நிகழ்ச்சியில் தான் பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்வேன் என்று கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனால் அந்நிகழ்ச்சியில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

மதுமிதா

பிக்பாஸ் 3-வது சீசன் நடைபெற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய மற்றொரு போட்டியாளர் என்றால் அது மதுமிதா தான். அந்நிகழ்ச்சியில் காவிரி பிரச்சனை பற்றி அவர் பேசியதாகவும் அதுகுறித்து அவருக்கும் ஷெரினுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து மதுமிதா கையை கத்தியால் அறுத்துக் கொண்டதன் காரணமாக அவரை பாதியிலேயே வெளியேற்றினார் பிக்பாஸ்.

கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசனில் பணப்பெட்டியை யாரும் எடுக்காத நிலையில், மூன்றாவது சீசனில் கவின் பணப்பெட்டி உடன் பாதியிலேயே வெளியேறினார். அவர் 5 லட்சம் பணத்தோடு அந்த சீசனில் வெளியேறினார்.

47
பிக்பாஸ் 4வது சீசன்

கேப்ரியல்லா

கவினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகை கேப்ரியல்லா பணப்பெட்டியோடு வெளியேறினார். அவரும் 5 லட்சம் பணத்தோடு வெளியேறினார்.

57
பிக்பாஸ் 5-வது சீசன்

நமீதா மாரிமுத்து

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதன்முறையாக கலந்துகொண்ட திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து. பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துகொண்ட நமீதா, 6-வது நாளிலேயே சில பிரச்சனைகள் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

சிபி

பிக்பாஸ் 5-வது சீசனில் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.11 லட்சம் பணத்தோடு வெளியேறினார் சிபி சந்திரன். பிக்பாஸ் வரலாற்றில் அதிக பணத்தோடு வெளியேறியவர் இவர்தான்.

67
பிக்பாஸ் 6வது சீசன்

ஜிபி முத்து 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் ஜிபி முத்து. இவர் அந்நிகழ்ச்சியில் முதல் வாரம் தாக்குப்பிடித்து இருந்த அவர், பின்னர் இரண்டாவது வாரத்தில் தன் வீட்டின் நியாபம் வந்துவிட்டதாக கூறி 13-வது நாளில் வெளியேறினார்.

கதிர் மற்றும் அமுதவாணன்

வழக்கமாக ஒரு பணப்பெட்டி மட்டுமே அனுப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், 6-வது சீசனில் மட்டும் இரண்டு பணப்பெட்டி அனுப்பப்பட்டது. இதில் முதல் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ரூ.3 லட்சத்தோடு வெளியேறினார் கதிர். இரண்டாவது பணப்பெட்டியில் ரூ.11.75 லட்சம் பணத்தோடு வெளியேறினார் அமுதவாணன்.

77
பிக்பாஸ் 7-வது சீசன்

பவா செல்லதுரை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி ஒரு வாரமே ஆகும் நிலையில், தற்போது அதில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுரை வெளியேறி உள்ளார். அவர் உடல்நல பிரச்சனை காரணமாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பவா செல்லதுரை... காரணம் என்ன?

Read more Photos on
click me!

Recommended Stories