பிக்பாஸ் நிக்சன் உடனான காதல் சர்ச்சை எதிரொலி... கடும் கோபத்தில் ஐஷூவின் பெற்றோர்! இன்ஸ்டாவால் வெளிவந்த உண்மை

பிக்பாஸ் வீட்டில் நிக்சன் வீசிய காதல் வலையில் சிக்கிய ஐஷூ மீது அவரது பெற்றோர் கடும் கோபத்தில் இருப்பது இன்ஸ்டாகிராம் மூலம் தெரியவந்துள்ளது.

Aishu, Nixen

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள 18 பேரில் ஐஷூவும் ஒருவர். இவர் ஊட்டியை சேர்ந்தவராவார். இவரது பெற்றோர் ஊட்டியில் ஏடிஎஸ் என்கிற புகழ்பெற்ற டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த ஏடிஎஸ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அசத்தி இருக்கின்றனர்.

Bigg Boss contestants

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரும், ஐஷூவும் உறவினர்கள் தான். ஐஷூவின் பெற்றோர் தான் அமீரை தத்தெடுத்து வளர்த்து அவருக்கு இருக்கும் நடனத்திறமை வெளியுலகுக்கு காட்டி, இன்று அவர் நடன இயக்குனராக ஜொலிக்க உதவி உள்ளனர். ஐஷூ 5-வது சீசனில் அமீர் போட்டியாளராக இருக்கும்போதே கெஸ்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D


Bigg Boss Tamil season 7

பின்னர் தற்போது 7-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஐஷூ முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். அவரது விளையாட்டு முறை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். முழுநேரமும் நிக்சன் உடனே இருப்பதும் அவருக்கும் உணவு ஊட்டி விடுவது என பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் ஆகவே இருவரும் வலம் வருகின்றனர்.

Aishu nixen love

சோசியல் மீடியாவிலேயே இவர்களது காதல் கடுப்பேற்றும் விதமாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், ஐஷூவின் வீட்டிலும் இதனை அவர்கள் பெற்றோர் எதிர்த்து வருவது தெரியவந்துள்ளது. ஐஷூ பிக்பாஸுக்கு நுழைந்தது முதல் தன் மகளுக்காக ஐஷூவின் அம்மா ஷைஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆதரவு திரட்டி வந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஐஷூ குறித்து எந்த ஒரு பதிவையும் போடாமல் உள்ளார் ஷைஜி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஐஷூவின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் தான் அவர்கள் எந்தவித பதிவும் போடாமல் இருக்கிறார்களோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... இந்த சீசன் அசல் கோளாறு இவர்தான்... பிக்பாஸில் நிக்சன் செய்யும் சில்மிஷ வேலைகள் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Latest Videos

click me!