Bigg Boss Tamil 10 : சினிமா கனவோடு பிக் பாஸ் வந்துள்ள சீரியல் ஹீரோ... யார் இந்த வினோத் பாபு?

Published : Sep 06, 2026, 06:55 PM IST

Bigg Boss Contestant Vinoth Babu : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகர் வினோத் பாபு. அவரைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
பிக் பாஸ் சீசன் 10

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. அந்நிகழ்ச்சியின் ஓப்பனிங் எபிசோடு எப்போதுமே எதிர்பார்ப்பை எகிற வைக்கும். ஏனெனில் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளராக களமிறங்கப்போகிறார்கள் என்பதை ஓப்பனிங் எபிசோடில் தான் அறிவிப்பார்கள். அந்த வகையில் இந்த பிக் பாஸ் சீசன் 10 ஓப்பனிங் எபிசோடு சற்று வித்தியாசமானதாக இருந்தது. இதில் மூன்று போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் வரவேற்கப்பட்டு அவர்களில் யார் உள்ளே செல்லலாம் என்பதை மக்களே தேர்ந்தெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு, அந்த மூவரில் இருந்து அதிக ஓட்டு வாங்கிய இருவர் உள்ளே செல்ல முடியும்.

Bigg Boss Tamil Season 10 House : சீசன் 10-க்காக டோட்டலாக மாறிய பிக் பாஸ் வீடு? அதில் இம்புட்டு வசதிகளா?

24
யார் இந்த வினோத் பாபு?

அப்படி இந்த சீசனில் உள்ளே சென்றிருக்கிறார் நடிகர் வினோத் பாபு. இவரும் ஒரு விஜய் டிவி புராடக்ட் தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி கலைஞராக பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்தார். இதையடுத்து சீரியலுக்குள் காலடி எடுத்து வைத்த வினோத் பாபு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியல் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் 2 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!

34
வினோத் பாபுவின் பயணம்

இவர் தன்னுடைய மனைவி உடன் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை என்கிற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். அந்நிகழ்ச்சி கடந்த 2020ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் வினோத் பாபு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் 2024ம் ஆண்டு சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த வினோத் பாபு, ஃபைண்டர் என்கிற படத்தில் நடித்தார். அப்படத்தை வினோத் ராஜேந்திரன் என்பவர் இயக்கி இருந்தார். அதன்பின்னர் பெரியளவில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Lakshmi Priya in BB house: ‘மகாநதி’ காவேரி இனி பிக்பாஸ் வீட்டில் - லட்சுமி பிரியாவின் புதிய பயணம் ஆரம்பம்!

44
வினோத் பாபு பிக் பாஸ் வந்தது ஏன்?

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலமாக சினிமா வாய்ப்பை தட்டி தூக்கும் கனவோடு வந்திருக்கிறார் வினோத் பாபு. அவரின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதால் மிமிக்ரி மூலம் அனைவரையும் எண்டர்டெயின் செய்வார் என்பது உறுதியாக தெரிகிறது. இவர் தன்னுடைய நகைச்சுவை திறமையை தாண்டி, தன்னுள் இருக்கும் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தும் முனைப்போடு உள்ளே சென்றுள்ளார். அது அவருக்கு எந்த அளவு கைகொடுக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.

Black Pandi in Bigg Boss: சிரிக்க வைத்த பாண்டி..இனி போட்டியாளராக மிரட்டுவாரா? பிக்பாஸ் 10-ல் பிளாக் பாண்டி!

Read more Photos on
click me!

Recommended Stories