பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பைனலிஸ்டுகளாக இருந்த திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரி ஆகியோர் இந்த சீசனில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. 24 போட்டியாளர்களுடன் நடந்த இந்நிகழ்ச்சியில், திவ்யா கணேஷ், அரோரா, சபரி, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு பேர் மட்டுமே பைனலுக்கு தேர்வானார்கள். இவர்களில் திவ்யா கணேஷ் தான் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார். இதையடுத்து இரண்டாவது இடத்தை சபரி பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை விக்கல்ஸ் விக்ரம் பிடித்திருக்கிறார். நான்காம் இடம் அரோராவுக்கு கிடைத்தது. இந்த நான்கு பைனலிஸ்டுகளும் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
அரோரா
அரோராவின் வாழ்க்கை பிக் பாஸுக்கு முன் பிக்பாஸுக்கு பின் என பிரித்துவிடலாம். இதற்கு முன்னர் சோசியல் மீடியா பிரபலமாக அறியப்பட்ட அரோரா, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்து இருக்கிறார். அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 105 நாட்கள் இருந்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.
35
விக்ரம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை யூடியூபராகவும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய புதிய பரிணாமத்தை காட்டி மக்கள் மனதை வென்றார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 105 நாட்கள் இருந்த விக்கல்ஸ் விக்ரம், ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அவருக்கு ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வாங்கி உள்ளார்.
விஜய் டிவி சீரியல்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சபரி. இவர் இந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி பைனல் வரை முன்னேறி அசத்தி உள்ளார். இவர் இந்த வீட்டில் 105 நாட்கள் இருந்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மொத்தம் அவர் தங்கி இருந்த 105 நாட்களுக்கு அவருக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
55
திவ்யா கணேஷ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட திவ்யா கணேஷ், இந்த சீசனின் 28வது நாளில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே எண்ட்ரி கொடுத்தார். இவர் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக 77 நாட்கள் இருந்துள்ளார். திவ்யா தான் இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. அதன்படி 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார் திவ்யா.