பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அதன் பிரம்மாண்ட பைனலில் வெற்றிபெற்று யார் டைட்டிலை தட்டி தூக்கி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8 சீசன்கள் முடிந்து தற்போது 9-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதையடுத்து நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே எண்ட்ரி ஆனார்கள். இவர்களில் இறுதிப்போட்டிக்கு திவ்யா கணேஷ், சபரி, அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு போட்டியாளர்கள் மட்டுமே தகுதி பெற்றனர். டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்த போட்டியாளரான கானா வினோத், பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சத்துடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
24
சூடுபிடித்த பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 75 நாட்கள் வரை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி சென்று கொண்டிருந்தது. ஃபேமிலி ரவுண்டுக்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கிய இந்த சீசன், டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் போது உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம். அந்த டாஸ்கின் ஒருபகுதியாக நடைபெற்ற கார் டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. அவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி, அவர்கள் இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் இருவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது இதுவே முதன்முறை ஆகும்.
34
மாறிய ஆட்டம்
ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பின்னர் ஆட்டமே அப்படியே தலைகீழாக மாறியது. அந்த கார் டாஸ்க்கின் போது பார்வதியை இரவு முழுக்க வறுத்தெடுத்த திவ்யா ஒரே நாளில் மக்கள் மனதை வென்று அசைக்கமுடியாத உயரத்தை தொட்டார். மறுபுறம் அரோரா டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் காலடி எடுத்து வைத்தார். எஞ்சியுள்ள போட்டியாளர்களில் சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் அதிகப்படியான வாக்குகளை பெற்று பைனலுக்குள் எண்ட்ரி ஆனார். இவர்களில் யார் வெற்றி பெற்று பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
இந்த நான்கு பைனலிஸ்டுகளில் விக்ரம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் அரோராவுக்கு கிடைத்திருக்கிறது. எஞ்சியுள்ள இருவரில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் திவ்யா கணேஷ். மேலும் இந்த சீசனில் இரண்டாவது இடம் சபரிக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வெல்லும் இரண்டாவது போட்டியாளராக திவ்யா உள்ளார். இதற்கு முன்னர் அர்ச்சனா 7வது சீசனில் டைட்டில் வென்றிருந்தார். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது பெண் போட்டியாளர் திவ்யா, இதற்கு முன்னர் ரித்விகா மற்றும் அர்ச்சனா கோப்பையை வென்றிருக்கிறார்கள்.