18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்

Published : Jan 08, 2026, 08:43 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சம் பணத்தோடு போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த பிரபலம் யார் என்பதை பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Cash Box Winner

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரிநாதன் ஆகிய 6 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க இந்த சீசனில் இதுவரை எலிமினேட் ஆன திவாகர், பிரவீன், ரம்யா ஜோ, பிரவீன் காந்தி, அப்சரா, வியானா உள்ளிட்ட போட்டியாளர்களும் உள்ளே சென்றுள்ளனர்.

24
பணப்பெட்டிக்கு போட்டி

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே பிக் பாஸின் தாரக மந்திரம். அதற்கு ஏற்றார் போல் பல்வேறு ட்விஸ்ட்களும் இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருக்கும். அதன்படி இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் புதுமையாக இந்த டாஸ்கை நடத்தினர். போட்டியாளர்களுக்கு வெவ்வேறு விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் அவர்கள் ஜெயிக்கும் பணத்தை கேஸ் பாக்ஸ் இல் வைத்து இறுதியாக எவ்வளவு வருகிறதோ அதை எடுத்துச் செல்லலாம் என்கிற ஜாக்பாட் அறிவிப்பை பிக் பாஸ் வெளியிட்டு இருந்தார். இதனால் ஒவ்வொரு டாஸ்கையும் போட்டியாளர்கள் முனைப்போடு விளையாடினர்.

34
பணப்பெட்டியை எடுத்தது யார்?

பணப்பெட்டி டாஸ்கின் தொடக்கத்தில் இந்தப் பெட்டியை சான்ட்ரா தான் எடுத்துச் செல்வார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் நடந்துள்ளது. கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் டைட்டில் வெல்லும் அளவுக்கு மவுசோடு இருந்த கானா வினோத் தற்போது பணப்பெட்டியோடு வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44
அவசரப்பட்ட கானா வினோத்

அவர் 18 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கானா வினோத்தின் இந்த முடிவு பிக் பாஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு வாரம் காத்திருந்தால் 50 லட்சம் பணத்தை வென்றிருக்கலாமே என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். கானா வினோத் பணப்பெட்டியோடு வெளியேறி உள்ளதால் இந்த சீசனில் திவ்ய கணேஷ் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர். அது நடக்குமா இல்லையா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும்.

Read more Photos on
click me!

Recommended Stories