பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர் இவரா? லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்

Published : Jan 03, 2024, 12:39 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இன்று பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

PREV
15
பிக்பாஸ் வீட்டில் இருந்து பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர் இவரா? லீக்கான தகவல்... ஷாக் ஆன ரசிகர்கள்
Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு புதுமைகளுடன் தொடங்கியது. வழக்கமாக ஒரு வீட்டில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இந்த முறை பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனில் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டதும் புது முயற்சியாக இருந்தது. இப்படி பல்வேறு டுவிஸ்ட்டுகளுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது இந்த சீசன்.

25
Bigg Boss contestants

பிக்பாஸ் 7-வது சீசன் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ளதால் இறுதிப்போட்டியில் வென்று டைட்டிலை தட்டித்தூக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, விசித்ரா, மாயா, பூர்ணிமா ஆகிய நான்கு பெண் போட்டியாளர்களும், விஷ்ணு விஜய், விஜய் வர்மா, தினேஷ், மணி ஆகிய நான்கு ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

35
Money task

இதில் விஷ்ணு விஜய் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்துவிட்டதால், அவர் நேரடியாக பைனலுக்குள் நுழைந்துவிட்டார். அவரைத்தவிர எஞ்சியுள்ள 7 போட்டியாளர்களும் இந்த வார எவிக்‌ஷனுக்கு நாமினேட் ஆகி உள்ளனர். இதனிடையே இந்த வாரம் பணப்பெட்டி ஒன்றை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் பிக்பாஸ். இந்த பேட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு முதல் நாளே ரூ.5 லட்சம் வரை உயர்ந்தது.

இதையும் படியுங்கள்... விஜய் படத்தில் இணையும் லெஜண்ட்...! GOAT படத்தின் பர்ஸ்ட் சிங்கிளில் காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்

45
vichithra

இந்த நிலையில் இன்று காலை இந்த பணத்தின் மதிப்பு ஏறவும் செய்யும் இறங்கவும் செய்யும் என சொல்லி டுவிஸ்ட் கொடுத்தார் பிக்பாஸ். இதனால் எப்போ பணத்தின் மதிப்பு உயரும் என போட்டியாளர்களும் ஆவலோடு காத்திருந்தனர். இதனிடையே தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி விசித்ரா தான் இந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

55
Vichithra eliminated

நேற்றைய எபிசோடில் தனக்கு பணப்பெட்டியை எடுக்கும் ஐடியா இல்லை என்றும், யாருக்கு கடன் இருக்கோ அவங்க பணத்தை எடுத்துட்டு ஓடுங்க எனவும் வீர வசனமெல்லாம் பேசி இருந்தார். கடைசியில் அவரே பணப்பெட்டியுடன் வெளியேறி உள்ள தகவல் அறிந்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். விசித்ரா ரூ.13 லட்சம் பணத்துடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அந்த தொகை ரூ.15 லட்சமாக உயரும் என்கிற ஆவலுடன் மற்ற போட்டியாளர்கள் காத்திருந்த நேரத்தில் விசித்ரா பெட்டியை அலேக்காக தூக்கிக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Yashika Aannand Abused: 13 வயதில்.. சந்தானம் படத்தில் யாஷிகாவுக்கு நடந்த பாலியல் சீண்டல்! அப்போவே செம்ம தில்லு

Read more Photos on
click me!

Recommended Stories