பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தவர் நிக்சன். இவர் முதல் இரண்டு வாரம் வேறலெவலில் விளையாடி வந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் ஐஷு உடனான காதலால் அப்படியே வேறு ரூட்டுக்கு சென்றுவிட்டார். ஒரு கட்டத்தில் இந்த காதல் ஜோடியை பார்த்து கடுப்பான ரசிகர்கள் ஐஷுவை முதலில் எலிமினேட் செய்தனர். ஐஷு எவிக்ட் ஆன பின்னர் வினுஷாவை உருவகேலி செய்து நிக்சன் பேசியது சர்ச்சையாக வெடித்தது.
25
Nixe instagram post
அதையெல்லாம் கடந்த 90 நாட்கள் வரை இந்நிகழ்ச்சியில் நீடித்த நிக்சன், கடந்த வாரம் எலிமினேட் ஆனார். எலிமினேட் ஆனதும் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவில், இப்போதான் எல்லாத்தையும் பார்த்தேன். எதிர்பார்க்காத எல்லாத்தையும் எதிர்ல பார்த்தது என்னா ஃபீல்... எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ். இவ்ளோ பேருக்கு என்னை புடிச்சிருக்குனு உள்ள இருக்கும் வரைக்கும் எனக்கு தெரியல. ஒருவேள தெரிஞ்சிருந்தா இன்னும் முயற்சி பண்ணிருப்பேனோ... ச்ச அதெல்லாம் யோசிக்கவே இல்ல மன்னிச்சிடுங்க.
35
Nixen outing
உள்ள கப்பு ஜெயிக்கனும்னு போகல. நான் யாருன்னு நான் தெரிஞ்சிக்க போனேன். இந்த வீடு தந்த அனுபவம் மற்றும் ஆண்டவரிடம் இருந்து கற்ற பாடங்கள் மூலம் மன ரீதியாக நல்லா டியூன் ஆகி இருக்கேன். என்கிட்ட இருக்க நல்ல விஷயங்களை பாராட்டுன எல்லாருக்கும் ரொம்ப நன்றி. என்கிட்ட இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டிய, சுட்டிக்காட்டிக்கொண்டு இருக்குற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
நல்ல விஷயங்களை வளர்த்துக்குறேன். கெட்ட விஷயங்களை திருத்திக்கிறேன். அவ்ளோ நட்சத்திரங்களுக்கு நடுவுல யாருன்னே தெரியாத எனக்கு ஆதரவு அளித்த எல்லாருக்கும், இந்த வாய்ப்புங்கிற வாழ்க்கையை கொடுத்த எல்லாருக்கும் நன்றினு வார்த்தைல சொன்னா பத்தாது வேலைல காட்டுறேன்” என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.
55
Nixen outing with jovika
அதுமட்டுமின்றி எலிமினேட் ஆன கையோடு தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் விளையாடி எலிமினேட் ஆன சக போட்டியாளர்களான ஜோவிகா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் உடன் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார் நிக்சன். மூவரும் ஒன்றாக அவுட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஐஷுவை சந்திக்கவில்லையா என நிக்சனுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.