நிக்சன் எலிமினேட் ஆனதுல அவ்வளவு சந்தோஷமா... ஐஷுவின் தந்தை போட்ட வேறலெவல் பதிவை வைரலாக்கும் நெட்டிசன்கள்

First Published | Dec 31, 2023, 9:35 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இருந்து நிக்சன் எலிமினேட் ஆனதும் ஐஷுவின் தந்தை போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகளுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி ஆரம்பமான போதே மணியும், ரவீனாவும் காதல் ஜோடிகளாக எண்ட்ரி கொடுத்தனர். இதையடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் பழகி பழகி காதலில் விழுந்தது நிக்சன் மற்றும் ஐஷு தான். இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கும் முன் இவர்கள் விளையாடிய விதம் ரசிகர்கள் பெரிதும் ஈர்த்ததோடு இந்த சீசனின் பைனல் வரை செல்லும் தகுதியுள்ள போட்டியாளர்களாக கருதப்பட்டனர்.

ஆனால் இருவரும் காதலிக்க தொடங்கிய பின்னர் அவர்கள் இருவரின் கேமும் முற்றிலும் ஸ்பாயில் ஆனது. குறிப்பாக ஐஷு 5 வாரங்களில் எலிமினேட் ஆனதற்கு முக்கிய காரணமே நிக்சன் தான். அவருடன் ரொமான்ஸ் செய்வதை மட்டுமே வேலையாக வைத்திருந்ததால் கடுப்பான ரசிகர்கள் இந்த காதல் ஜோடியை பிரிக்க முடிவெடுத்து, ஐஷுவை எலிமினேட் செய்தனர். பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் நிலவரம் அறிந்து ஐஷு மிகவும் அப்செட் ஆனார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

BB Tamil 7

அவரது பெற்றோர் அவரை இனி பிக்பாஸ் பக்கமே செல்லவேண்டாம் என சொல்லிவிட்டதால் எலிமினேட் ஆனபின் ஒரு பேட்டி கூட கொடுக்காமல் சைலண்ட் மோடுக்கு சென்றார் ஐஷு. அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் இருந்தும் விலகியே இருந்து வருகிறார். பிக்பாஸுக்கு பின் ஒரே ஒரு அறிக்கை வெளியிட்ட ஐஷு. அதில் தான் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்றதாகவும் குறிப்பிட்டு இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த நிலையில், நிக்சன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன உடன் ஐஷுவின் தந்தை போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஸ்பைடர் படத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா பிறரின் மரண ஓலம் கேட்டு சந்தோஷப்படும் புகைப்படத்தை பதிவிட்டு, ஒரு காரணத்துக்காக நான் சந்தோஷமா இருக்கேன் என சூசகமாக பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் நிக்சன் எலிமினேட் ஆனதை கொண்டாடும் விதமாக இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் டபுள் எவிக்‌ஷன்... ஒன்றாக எலிமினேட் ஆன நிக்சன், ரவீனாவுக்கு லட்சக்கணக்கில் வாரி வழங்கப்பட்ட சம்பளம்

Latest Videos

click me!