பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் எலிமினேட் ஆன நிக்சன் மற்றும் ரவீனாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அப்படி தமிழில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 90 நாட்களை கடந்து பைனலை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் நகர்ந்து வருகிறது. இன்னும் இரு வாரத்தில் பைனல் நடைபெற உள்ளதால் யார் வெல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
24
Vishnu
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் வெற்றிபெற்ற விஷ்ணு, முதல் ஆளாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என அறிவித்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கமல்ஹாசன். அதன்படி மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்று கடைசி 2 இடங்களை பிடித்த நிக்சன் மற்றும் ரவீனா ஆகியோர் இந்த வாரம் எலிமினேட் ஆகினர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் மணி, விஷ்ணு, விசித்ரா, பூர்ணிமா, மாயா, தினேஷ், அர்ச்சனா, விஜய் வர்மா ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆன நிக்சன் மற்றும் ரவீனாவின் சம்பளம் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் 90 நாட்களுக்கு அவருக்கு மொத்தமாக ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
44
Nixen salary
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அதிகளவில் சர்ச்சையில் சிக்கிய போட்டியாளராக வலம் வந்தவர் நிக்சன். இவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். அதன்படி மொத்தம் அவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 90 நாட்களுக்கு அவருக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து எஞ்சியுள்ள போட்டியாளர்களில் யார் இறுதிப்போட்டிக்கு செல்லப்போகிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.