டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆன விஷ்ணு, மணி... அப்போ வின்னர் இவங்க தானா? செம்ம டுவிஸ்ட்

Published : Dec 27, 2023, 10:15 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று வரும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் இருந்து விஷ்ணு மற்றும் மணி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

PREV
14
டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் இருந்து எலிமினேட் ஆன விஷ்ணு, மணி... அப்போ வின்னர் இவங்க தானா? செம்ம டுவிஸ்ட்
Ticket To Finale

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 85 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்க்கில் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் கலந்துகொள்ளும் தகுதியை இழந்ததால் எஞ்சியுள்ள 8 போட்டியாளர்களுக்கு இடையே இந்த டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.

24
Raveena, vichithra

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நேற்று நடைபெற்ற முயல் டாஸ்க்கில் ரவீனா முதலில் எலிமினேட் ஆனார். இதற்கு அடுத்த சுற்றில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகியோர் வெளியேறினர். பின்னர் பூர்ணிமா மற்றும் நிக்சனை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார் விஷ்ணு. இதையடுத்து மாயா, மணி மற்றும் விஷ்ணு ஆகியோரு மோதிய இறுதி சுற்றில் மணியின் மாஸ்டர் பிளான் காரணாம மாயா அவுட் ஆனார். இதனால் அவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. அதிக முயல்களை கொண்டவர்கள் என்கிற அடிப்படையில் மணிக்கு இரண்டாம் இடமும், விஷ்ணுவுக்கு மூன்றாம் இடமும் கிடைத்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Bigg Boss Tamil season 7

இந்த நிலையில், இன்று டிக்கெட் டூ பினாலேவின் இரண்டாவது டாஸ்க் நடத்தப்பட்டு உள்ளது. ஆக்டிவிட்டி ஏரியாவில் நடத்தப்பட்ட இந்த டாஸ்க்கிற்கு முயல் மேக்ஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் கார்டில் இருக்கும் தகவல்கள் அடிப்படையில் போட்டியாளர்கள் விளையாடி முன்னேறி சென்று முயல்களை எடுப்பதே இந்த டாஸ்க்கின் ரூல்ஸ் ஆக இருந்தது. இந்த டாஸ்க்கில் ரவீனா கையில் யாரையாவது எலிமிமேட் செய்யும் பவர் உடன் கூடிய கார்டு கிடைக்கிறது.

44
Ticket To Finale Task 2

அந்த கார்டை வாங்கியதும் மாயா அல்லது பூர்ணிமாவை ரவீனா எலிமினேட் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் யாரும் எதிர்பாராத வகையில் விஷ்ணுவை எலிமினேட் செய்வதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து மணி மற்றும் ரவீனா அடுத்தடுத்து எலிமினேட் ஆக எஞ்சியுள்ள தினேஷ், விசித்ரா, நிக்சன், பூர்ணிமா, மாயா, ஆகிய 5 பேருக்கு இடையே தான் போட்டி நடந்துள்ளது. இதில் பூர்ணிமா தான் லீடிங்கில் இருப்பதால் அவர் தான் இந்த டாஸ்க்கில் வெற்றிபெறுவார் போல தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விருது வென்ற பாராசைட் படத்தில் நடித்த பிரபல நடிகர் காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு

Read more Photos on
click me!

Recommended Stories