பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த வாரம் முழுக்க அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக சென்று போட்டியாளர்களை மகிழ்வித்தனர். இதனால் பிக்பாஸ் வீடே பாச மழையில் நனைந்தது என்றே சொல்லலாம்.
24
Bigg Boss saravana vickram
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற உறவினர்கள் போட்டியாளர்களுக்கு சில ஹிண்ட்டுகளையும் கொடுத்தனர். அப்படி சரவண விக்ரமுக்கு அவரது பெற்றோர் மற்றும் தங்கை கொடுத்த முக்கியமான அட்வைஸ் என்னவென்றால் மாயா மற்றும் பூர்ணிமா உடன் சேர வேண்டாம் என்பது தான். அவர்கள் இருவரும் உன்னை மட்டும் தட்டும் வகையில் புறம்பேசி வருவதாக கூறினார். இதனால் அவர்கள் இருவருடனும் பேசுவதை நிறுத்திக் கொண்டார் விக்ரம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அவரின் இந்த நடவடிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும், அது சற்று காலதாமதமாக வந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இதனால் இந்த வார எவிக்ஷனில் சிக்கி இருந்த சரவண விக்ரமை ரசிகர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் இந்த வாரம் நாமினேஷனில் உள்ள விசித்ரா மற்றும் ரவீனாவை விட கம்மியான வாக்குகளை மட்டுமே பெற்று இருந்ததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
44
Saravana Vickram salary
தன்னைத்தானே டைட்டில் வின்னர் என சொல்லிக்கொண்டு சுற்றிவந்ததால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட சரவண விக்ரம், தற்போது எலிமினேட் ஆகியுள்ள நிலையில் அவரின் சம்பள விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரம் வரை அவருக்கு சம்பளம் வாழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சரவண விக்ரம் மொத்தம் இருந்த 84 நாட்களுக்கு அவருக்கு சுமார் ரூ.15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.