Bigg Boss Elimination
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தான் அதிகளவிலான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. படிப்பு விஷயத்தில் ஜோவிகா - விசித்ரா இடையே நடந்த மோதல் முதல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது வரை எக்கச்சக்கமான சம்பவங்கள் நடந்துள்ளன.
Vichithra
இப்படி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக விளங்கி வரும் இது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதனால் போட்டியாளர்களின் உறவினர்கள் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் இந்த வாரம் முழுக்க செம்ம ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Raveena
இப்படி டாஸ்க் ஜாலியாக இருந்தாலும் இந்த வாரம் எவிக்ஷனும் நிச்சயம் இருக்கிறது. அதன்படி இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் இப்படி ஒரு நாமினேஷல் லிஸ்ட் இருந்ததில்லை. இந்த முறை வெறும் 3 பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதன்படி விசித்ரா, சரவண விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் தான் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள். இவர்களில் ஒருவர் தான் இந்த வார இறுதியில் எலிமினேட் ஆக உள்ளார்.