சண்டைகளுக்கு பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பிரபலமானதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
24
Pallavi Prashanth Arrested
தற்போது தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தெலுங்கிலும் 7-வது சீசன் அண்மையில் முடிவடைந்துள்ளது. இதில் பல்லவி பிரசாந்த் என்பவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பைனலில் அமர்தீப் என்பவருக்கும் பல்லவி பிரசாந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் பல்லவி பிரசாந்த் வெற்றி பெற்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் வெளியே வந்ததும் அவர்கள் சமாதானம் ஆகி நண்பர்களாகி விடுவார்கள். ஆனால் தெலுங்கு பிக்பாஸில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராக பல்லவி பிரசாந்த் அறிவிக்கப்பட்டதும் அவரது ரசிகர்கள் 2-ம் இடம் பிடித்த அமர்தீப்பின் காரை சாலையில் மறித்து தாக்கி உள்ளனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
44
Amardeep chowdary car attacked
அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் செய்த இந்த அடாவடித்தனத்தால் தற்போது பல்லவி பிரசாந்த் தெலங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அவரை கைது செய்த போலீசார், அவர்மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக இப்படி ரசிகர்கள் அடாவடித்தனம் செய்தது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.