திடீரென அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா... டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்!

Published : Dec 14, 2023, 01:07 PM IST

பிக்பாஸில் டான்ஸ் மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்ற அர்ச்சனா, தனது புள்ளியை மற்றொரு போட்டியாளருக்கு பகிர்ந்து கொடுத்து டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.

PREV
14
திடீரென அந்தர் பல்டி அடித்த அர்ச்சனா... டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடந்த எதிர்பாரா டுவிஸ்ட்!
VJ Archana

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த போட்டியாளர் என்றால் அது அர்ச்சனா தான். இவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தாலும் வந்த முதல் வாரத்திலேயே தொட்டா சினுங்கி போல் அழுதுகொண்டே இருந்ததால் கமல்ஹாசனே அவரை விமர்சித்து இருந்தார். இதற்கு அடுத்த வாரம் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் இவரை மாயாவின் புல்லி கேங் வறுத்தெடுத்தனர்.

24
Poornima

அவர்களின் வெறுப்பான பேச்சுக்கெல்லாம் அஞ்சாத அர்ச்சனா, தனி ஆளாக நின்று அவர்களை எதிர்கொண்டு அசத்தியதோடு, மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக உருவெடுத்தார். இதனால் அர்ச்சனா மீது மாயா, பூர்ணிமா ஆகியோர் கடுப்பாகவே இருந்து வந்தனர். கடந்த வாரம் வினுஷா விவகாரத்தை இழுத்து நிக்சனுடன் மல்லுக்கட்டி தனக்கு கமலிடம் அப்ளாஸ் கிடைக்கும் என்கிற நினைப்பில் இருந்த அர்ச்சனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Maya, Poornima

அவர் நிக்சனுக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பியும் வேஸ்ட் ஆனது. அதுமட்டுமின்றி அர்ச்சனா தன் சுயலாபத்திற்காக இப்படி வெளியே சென்ற போட்டியாளர்களின் பிரச்சனைகளை இழுத்து பேசி வருவதாகவும் விமர்சித்தார். கமலின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட அர்ச்சனா, தன்னுடைய ஆக்ரோஷமான விளையாட்டை மூட்டைகட்டி வைத்துவிட்டு, சைலண்ட் மோடுக்கு சென்று விளையாடி வருகின்றார்.

44
Archana, Poornima

இந்த நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் அவர் போட்டியிட தகுதியற்றவர் என சக போட்டியாளர்கள் தேர்வு செய்ததால் அவரால் இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் போட்டியிட முடியாத சூழல் உருவானது. இதனிடையே அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டான்ஸ் மாரத்தான் சுற்றில் சிறந்த பர்பார்மராக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா தன்னால் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அதன்மூலம் தனக்கு கிடைத்த பாயிண்ட்டை பூர்ணிமாவுக்கு வழங்கி இருக்கிறார். அர்ச்சனாவின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத பூர்ணிமா அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார். ஆனால் மாயா இதனால் கடுப்பாகி அர்ச்சனாவும் பூர்ணிமாவும் பேவரைட்டிஸம் செய்வதாக விமர்சித்து உள்ளார். எலியும் பூனையுமாக இருந்த அர்ச்சனா- பூர்ணிமா இப்படி ஒரே டாஸ்க்கில் ஒட்டிக்கொண்டது மாயாவுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படியுங்கள்... ஆளவந்தான் vs முத்து... ரீ-ரிலீஸில் மாஸ் காட்டியது யார்? ரஜினியா... கமல்ஹாசனா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories