பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் தற்போது 13 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர். இதில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் வாக்களிக்க முடியாமல் போனதால் எலிமினேஷன் நடக்கவில்லை. இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதில் யார் யாரெல்லாம் நாமினேட் ஆகியுள்ளார்கள் என்கிற தகவலும் கசிந்து உள்ளது.
24
Bigg Boss Nomination
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வினுஷா பிரச்சனையால், நிக்சன் அர்ச்சனாவை பார்த்து சொருகிருவேன் என்று சொன்னது வார இறுதியில் மிகப்பெரிய பிரச்சனையாக பேசப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் அந்த விஷயத்தை அப்படியே திசை திருப்பிவிட்டதோடு, நிக்சனுக்கு ஆதரவாக பேசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் குழம்பிப் போயினர். அதுமட்டுமின்றி உரிமைக்குரல் எழுப்பிய அர்ச்சனாவையே கமல்ஹாசன் வறுத்தெடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
இதனால் கமல்ஹாசன் மீது அதிருப்தி அடைந்த ரசிகர்கள் அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டு சிம்புவை மீண்டும் தொகுப்பாளராக களமிறக்கும் படி கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷனில் சிக்கியது யார் யார் என்பது குறித்த புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கோல்டு ஸ்டார் வைத்துள்ள சரவண விக்ரமும், இந்த வார கேப்டன் ஆன மணியும் எவிக்ஷனில் இருந்து தப்பி உள்ளனர்.
44
Bigg Boss nomination list
அதேபோல் நிக்சனும் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பி உள்ளதுபோல தெரிகிறது. அவரைத் தவிர்த்து விசித்ரா, கூல் சுரேஷ், பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, விஷ்ணு ஆகியோர் தொக்காக எவிக்ஷனில் சிக்கி உள்ளனர். இவர்களில் இருந்து இருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் என தெரிகிறது. அவர்கள் யார் யார் என்பது மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் முடிவாகும்.