பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன வனிதா, தற்போது தன் மகளையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கி உள்ளார். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் புலி போல சீறிப் பாய்ந்த ஜோவிகா, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் மிகவும் சைலண்டாக விளையாடி வருகிறார். குறிப்பாக முதல் வாரத்தில் கல்வி விவகாரத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அவரை வேறலெவலில் டிரெண்ட் ஆக்கியது.