முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள் சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறின. ஆரம்பத்தில் ஜோவிகா - விசித்ரா இடையேயான கல்வி முக்கியத்துவம் பற்றியான சண்டை, பிரதீப்பின் ரெட் கார்டு எவிக்ஷன், விசித்ரா சொன்ன பாலியல் புகார், நிக்சன் வினுஷாவை உருவகேலி செய்தது என ஏராளமான விஷயங்கள் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தன.