அவ்ளோ தான் உனக்கு லிமிட்டு... ஆழ்வார்பேட்டை ஆண்டவராக மாறி பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த கமல்

Published : Nov 26, 2023, 09:47 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை பூர்ணிமா, தன்னை விமர்சித்து வருவதை அறிந்த கமல்ஹாசன் அவருக்கு செம்ம டோஸ் கொடுத்துள்ளார்.

PREV
14
அவ்ளோ தான் உனக்கு லிமிட்டு... ஆழ்வார்பேட்டை ஆண்டவராக மாறி பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்த கமல்
poornima, kamal

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் பரபரப்பு பஞ்சமில்லாத போட்டியாளர்கள் என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமா தான். இவர்கள் இருவருமே நெருங்கிய தோழிகளாகவும் இருந்து வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வார வாரம் சண்டை போட்டு வந்த மாயா, கடந்த வாரம் முழுக்க சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார். அவரின் இந்த மாற்றம் ரசிகர்களுக்கு பிடித்துப் போக, நேற்று கமல்ஹாசன் உடன் கலந்துரையாடிய போது மாயாவுக்கு செம்ம அப்ளாஸும் கிடைத்தது.

24
kamalhaasan

மாயா மாறினாலும் அவரின் தோழியான பூர்ணிமா, புரணி பேசும் வேலையை தொடர்ந்து வந்ததால் அவருக்கு ரசிகர்களிடம் இருந்து எந்தவித கைதட்டல்களும் கிடைக்கவில்லை. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் எந்த ஒரு சீசனிலும் போட்டியாளர்கள் செய்யாத விஷயத்தை கடந்த வாரம் பூர்ணிமா செய்தார். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசனையே அவர் விமர்சித்து பேசி இருந்தார். அவர் ஒருதலைபட்சமாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, கமலை குடிகார அங்கிள் என்றும் திட்டி இருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Poornima ravi

இந்த விஷயங்கள் எல்லாம் கமல் காதுக்கு செல்ல அவர் பூர்ணிமாவுக்கு செம்ம டோஸ் கொடுத்திருக்கிறார். அதுகுறித்த புரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த புரோமோவில், பூர்ணிமாவின் குற்றச்சாட்டை குறிப்பிட்டு பேசியுள்ள கமல், என்னைக் கேட்டீங்க, அவங்களை கேட்டீங்களானு எனக்கு நீங்க நியாபகப்படுத்துறீங்க. நான் எதை எதையெல்லாம் விமர்சிக்கனும்னு நீங்க முடிவு பண்ண முடியாது என கமல் சொன்னதும் பூர்ணிமாவின் முகம் சுருங்கிப் போனது.

44
Bigg Boss Kamal

தொடர்ந்து பேசிய கமல், இந்த வாரக் கடைசில இதைக் கேட்கலேனா பாருங்கனு சொல்றீங்க. என்ன பண்ணீடுவீங்க என்னை என கோபத்துடன் கொந்தளித்தார் கமல். இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடத்துக்கு ஆழ்வார்பேட்டை ஆண்டவராக கமல் மாறிவிட்டதாக கூறி ஃபயர் விட்டு வருகின்றனர். கமல் பூர்ணிமாவின் குற்றச்சாட்டுகளை தன் ஸ்டைலில் டீல் செய்து உள்ளதால் இன்றைய எபிசோடு நிச்சயம் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘அமைதிப்படை’ அல்வா சீனில் அத்துமீறினாரா சத்யராஜ்..? சர்ச்சை பதிவுக்கு கஸ்தூரி கொடுத்த பரபரப்பு விளக்கம்

Read more Photos on
click me!

Recommended Stories