பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நேற்றைய எபிசோடில் வைல்டு கார்டு எண்ட்ரியாக விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்ததால் போட்டியாளர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர். மேலும் அவர்கள் வெளியில் நடக்கும் விஷயங்களை சொல்லச் சொல்ல ஆட்டம் மேலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
24
Bigg Boss Tamil season 7
பிக்பாஸ் வீட்டின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெறும். அதில் இந்த வீட்டில் இருந்து வெளியேற 2 போட்டியாளர்களை காரணத்தோடு நாமினேட் செய்ய வேண்டும். வழக்கமாக கன்பெஷன் ரூமில் நடைபெறும் நாமினேஷன், இந்த வாரம் ஓப்பனாகவே நடந்துள்ளது. ஒவ்வொருவரும் தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் நபர்களை நேரடியாகவே அறிவித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் அதிகம் பேரால் நாமினேட் செய்யப்பட்டது சரவண விக்ரம் தான். இந்த வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக சுற்றிவந்த இவர் கடந்த வாரம் நாமினேஷனிலேயே சிக்காமல் தப்பித்தார். அதனால் கடுப்பான போட்டியாளர்கள் இந்த வாரம் அவரை ஸ்கெட்ச் போட்டு நாமினேஷனில் சிக்க வைத்துவிட்டனர். இதையடுத்து பூர்ணிமாவுக்கும் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளன.
44
Poornima
இதில் டுவிஸ்ட் என்னவென்றால் பூர்ணிமாவின் நெருங்கிய தோழியான மாயாவே அவரை நாமினேட் செய்து இருக்கிறார். அவரால் தன்னுடைய கேம் பாதிக்கப்படுவதை உணர்ந்த மாயா, ஒன்னு நான் இருக்கணும் இல்ல அவ இருக்கனும் என சொல்லி பூர்ணிமாவை நாமினேட் செய்திருக்கிறார். இதுதவிர வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோரும் நாமினேஷனில் சிக்கி உள்ளனர்.