சீக்ரெட் ரூமில் ஜோவிகா..! இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட் வைத்தாரா பிக்பாஸ்? உண்மை தகவல் இதோ

Published : Dec 03, 2023, 09:36 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் வனிதா மகள் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரு புது டுவிஸ்ட் காத்திருக்கிறது.

PREV
14
சீக்ரெட் ரூமில் ஜோவிகா..! இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட் வைத்தாரா பிக்பாஸ்? உண்மை தகவல் இதோ
jovika

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனும், முதல் வாரத்தில் இருந்தே சூடுபிடிக்க தொடங்கி தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வரிசையாக பல்வேறு டுவிஸ்டுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டு வீடுகளுடன் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 7 வைல்டு கார்டு போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர்.

24
Jovika vijayakumar

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் வார வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் சரவண விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணி ஆகியோர் சிக்கி இருந்தனர். இதில் சரவண விக்ரம் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் டுவிஸ்ட் வைத்த பிக்பாஸ் ஜோவிகாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
vanitha Daughter Jovika

தற்போது அதிலும் ஒரு டுவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளார் பிக்பாஸ். அது என்னவென்றால், ஜோவிகா எலிமினேட் ஆனாலும் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றாமல், சீக்ரெட் ரூமில் அவரை தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்றே அவர எலிமினேட் ஆனாலும் அவர் வீட்டுக்கு வரவில்லை என்கிற தகவலை நேற்றைய பிக்பாஸ் ரிவ்யூ ஷோவில் வனிதாவே உலறிவிட்டார். இதன்மூலம் ஜோவிகா சீக்ரெட் ரூமில் உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

44
Jovika eviction twist

ஜோவிகாவுக்கு முன்னதாக சீக்ரெட் ரூமில் இதற்கு முந்தைய சீசன்களில் 3 போட்டியாளர்கள் இருந்துள்ளனர். அதன்படி முதல் சீசனில் சுஜா வருணி சீக்ரெட் ரூமில் இருந்தார். இரண்டாவது சீசனில் வைஷ்ணவியும், மூன்றாவது சீசனில் சேரனும் பிக்பாஸ் சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் கடந்த மூன்று சீசன்களாக சீக்ரெட் ரூமில் யாரும் தங்க வைக்கப்படாத நிலையில், தற்போது நடைபெறும் 7-வது சீசனில் ஜோவிகாவை தங்கவைத்து தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் பிக்பாஸ்.

இதையும் படியுங்கள்... கோடான கோடி நன்றி... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படத்துக்கு அமோக வரவேற்பு - தனுஷ் போட்ட எமோஷனல் டுவிட்

Read more Photos on
click me!

Recommended Stories