தயவு செஞ்சு பேசாதீங்க... அறைஞ்சிருவேன்! காதலுக்கு எதிர்ப்பு... ரவீனா பேமிலியிடம் செம்ம திட்டு வாங்கிய மணி

First Published | Dec 21, 2023, 9:48 AM IST

பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக வலம் வரும் மணி - ரவீனா இருவரும் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது ரவீனாவின் உறவினரிடம் செம்ம திட்டு வாங்கி இருக்கிறார்கள்.

Mani raveena

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் உள்ளே நுழையும் போதே காதல் புறாக்களாக எண்ட்ரி கொடுத்தவர்கள் தான் மணி - ரவீனா. இவர்கள் இருவரும் காதலிப்பது ஊருக்கே தெரிந்த விஷயம். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு கேம் விளையாடுவது கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த வாரம் கமல்ஹாசனே ரவீனாவின் இந்த செயலை கண்டித்திருந்தார். அதன் எதிரொலியாக இந்த வார எவிக்‌ஷனிலும் ரவீனா சிக்கி இருக்கிறார். 

Raveena family

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று அவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததும் பாச மழை பொழிந்து வருகின்றனர். இதுவரை நிக்சன், சரவண விக்ரம், அர்ச்சனா, பூர்ணிமா, மணி, தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்த நிலையில், இன்று ரவீனா வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

Bigg boss contestants Mani Raveena

இதுவரை வந்த போட்டியாளர்களின் குடும்பத்தார் அனைவரும் போட்டியாளர்களிடம் பாசமாக நடந்துகொண்டனர். ஆனால் இன்று எண்ட்ரி கொடுத்துள்ள ரவீனாவின் உறவினர்கள் அவருக்கு செம்ம டோஸ் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மணியை அவர் காதலிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ரவீனாவுடன் தனியாக பேசும்போது அவர் கூறியதாவது : “அறைஞ்சிருப்பேன், அவ்ளோ கோபம் வருது. எல்லார்கிட்டையும் அம்மா ஒத்துக்கிட்டாங்கனு சொல்ற. மணிக்காக நீ இங்க விளையாட வரல. இது நம்மளுக்கு தேவை கிடையாது” என ரவீனாவை வெளுத்துவாங்கி இருக்கிறார்.

mani raveena love

இதையடுத்து மணி உடன் சென்று பேசும்போது : “தனியா உட்காருவதற்காகவா ரெண்டு பேரும் இந்த ஷோவுக்கு வந்தீங்க. தயவு செஞ்சு அவள நீங்க கூப்பிட்டு வச்சு பேசாதீங்க” என மணியிடமும் ஸ்டிரிக்ட் ஆக சொல்லி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரவீனாவின் உறவினரைப் பார்க்கும்போது நான்காவது சீசனில் ஷிவானியின் அம்மா பேசியது போல் உள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர். இதன்மூலம் ரவீனாவின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் கைது... கோப்பையை வென்ற கையோடு ஜெயிலுக்கு சென்றதன் பின்னணி என்ன?

Latest Videos

click me!