பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரு வாரங்களே உள்ளதால், யார் டைட்டில் வெல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது. தற்போது விசித்ரா, விஜய் வர்மா, தினேஷ், மாயா, பூர்ணிமா, மணிச்சந்திரா, அர்ச்சனா, விஷ்ணு விஜய் ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.