என்னை கசக்கி தூக்கி போட்டுட்டாரு... விஷ்ணு மீது பகீர் குற்றச்சாட்டை கூறிய பூர்ணிமா - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்

First Published | Jan 2, 2024, 1:25 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் வெற்றிபெற்ற விஷ்ணு விஜய் தன்னை கசக்கி தூக்கிப்போட்டதாக பூர்ணிமா பகீர் குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

Poornima, vishnu

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் காதல் ஜோடிக்கு பஞ்சமில்லாத ஒரு சீசனாக அமைந்தது. முதலில் மணி ரவீனா இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒருகட்டத்தில் அது இருவரது கேமையும் பாதிப்பது தெரிந்ததும் இருவருமே அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். பின்னர் நிக்சனும், ஐஷுவும் ஒருபுறம் லவ் டிராக் ஓட்டிக் கொண்டிருந்தனர். இந்த காதல் எல்லைமீறி சென்றதால் மக்கள் கடுப்பாகி ஐஷுவை வெளியேற்றினர்.

Bigg Boss Tamil season 7

இதையடுத்து இறுதியாக உருவான காதல் ஜோடி தான் விஷ்ணு - பூர்ணிமா. பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக வலம் வந்த விஷ்ணு, பூர்ணிமாவை பார்த்தால் மட்டும் தனக்கு ஒரு வித ஃபீலிங் வருவதாக ஒருமுறை வெளிப்படையாகவே கூறி இருந்தார். இப்படி இவர்களின் காதல் சுமூகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த விஷ்ணுவின் சகோதரிகள் இருவரும், பூர்ணிமாவின் சகவாசத்தை கட் பண்ணினால் நல்லா இருக்கும் என ஹிண்ட் கொண்டுத்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

vishnu, poornima love

இதனால் உஷாரான விஷ்ணு, பூர்ணிமாவிடம் இருந்து விலகியே இருந்தார். கடந்த வாரம் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்த நிலையில், டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகளில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள்ளும் நுழைந்தார் விஷ்ணு. குறிப்பாக முயல் டாஸ்க்கில் விஷ்ணு வெற்றிபெற்றது பிடிக்காமல் அவரை பார்த்து பூர்ணிமா காரித்துப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த செயலை கமல்ஹாசனும் கண்டித்தார்.

vishnu vs Poornima

இந்த நிலையில், இன்று பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும், இன்னொருவரை தேர்ந்தெடுத்து அவருடைய பிக்பாஸ் பயணத்தை பற்றி விவரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விஷ்ணுவை தேர்வு செய்த பூர்ணிமா, அவர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறினார். என்ன வேண்டுமானாலும் செய்து ஒரு விஷயத்தை விஷ்ணு அடைவார் என்பது தனக்கு தெளிவாக தெரிந்தது. இந்த வீட்டிலேயே உங்களால அதிகபட்சமாக யூஸ் பண்ணப்பட்டது நான் தான். என்னை கசக்கி தூக்கி போட்டுட்டீங்க என பூர்ணிமா ஒவ்வொரு குற்றச்சாட்டுகளாக அடுக்கினார். இதையடுத்து பேசிய விஷ்ணு, நீ தான் எல்லாரையும் யூஸ் பண்ணி தூக்கி போடுற என பூர்ணிமாவை பார்த்து சொன்னதும் மாயா குறுக்கிட்டு பாயிண்ட்ஸ வேஸ்ட் பண்ணாதீங்க என சொன்னதும் கடுப்பான விஷ்ணு, நீ ஜீரோ என மாயாவை பார்த்து கடிந்து கொண்ட காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆனதும் பெண் போட்டியாளருடன் அவுட்டிங்... ஐஷூவை சந்தித்தாரா நிக்சன்? வைரல் போட்டோஸ்

Latest Videos

click me!