பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்டாக மாஸ் எண்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் யார்... யார்?- பிரதீப் ஆண்டனியும் வருகிறாரா?

First Published | Jan 9, 2024, 9:43 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது இறுதி வாரம் என்பதால் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எண்ட்ரி கொடுக்க உள்ளனர்.

Bigg Boss Tamil season 7

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளது. இந்த சீசனில் விஷ்ணு டிக்கெட் டூ பினாலேவில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்தார். இதையடுத்து மாயா, அர்ச்சனா, தினேஷ், விஜய் வர்மா, மணிச்சந்திரா, ஆகியோர் கடந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து பைனலுக்கு முன்னேறினர். இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் டைட்டில் வின்னராகி ரூ.50 லட்சத்தை தட்டிச் செல்ல உள்ளனர்.

Bigg Boss season 7 contestants

அதுமட்டுமின்றி பிக்பாஸ் 7-வது சீசனில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள் வீடு பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. கடந்த வார இறுதியில் அர்ச்சனாவுக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து அவர்தான் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக உள்ளிருக்கும் போட்டியாளர்களே கணித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை... கடைசி நேரத்தில் வந்த புது சிக்கலால் தள்ளிப்போகும் அயலான் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Tap to resize

Pradeep Antony

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் முழுக்க எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக செல்ல உள்ளனர். அதன்படி முதல் ஆளாக அனன்யா பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்ட் ஆக எண்ட்ரி கொடுத்துள்ளார். காலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது உள்ளே சென்ற அனன்யா சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் வெளியே என்னவெல்லாம் நடக்கிறது என்பது பற்றி போட்டியாளர்களுடனும் கலந்துரையாடினார்.

Vinusha, Aishu

அனன்யாவுக்கு அடுத்தபடியாக ஜோவிகா, சரவண விக்ரம், நிக்சன், கூல் சுரேஷ், பூர்ணிமா, விசித்ரா, அன்னபாரதி, கானாபாலா, ஆகியோர் செல்வார்கள் என கூறப்படுகிறது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தது பிரதீப் உள்ளே செல்வாரா என்பது தான். ஆனால் அவர் உள்ளே வர வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பில்லை. அதேபோல் ஐஷு, வினுஷா ஆகியோரும் வருவது டவுட்டு தான் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மீண்டும் கதையின் நாயகனாக மாறும் "நடிப்பு அரக்கன்" - இணையும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் - யாருனு தெரியுமா?

Latest Videos

click me!