ஜோவிகா வீட்டில் ஆஜரான பிக்பாஸ் Bully Gang... தடபுடலாக பார்ட்டி கொடுத்த வனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jan 8, 2024, 10:55 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பூர்ணிமா, நிக்சன், சரவண விக்ரம் ஆகியோருக்கு தன் வீட்டில் பார்ட்டி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தினேஷ், மாயா, விஜய் வர்மா, மணிச்சந்திரா, அர்ச்சனா, விஷ்ணு விஜய் ஆகியோர் பைனலிஸ்ட்டாக உள்ளனர். இதில் கடந்த வாரம் பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறியதை அடுத்து, மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பூர்ணிமாவுக்கு அவரது குடும்பத்தார் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பூர்ணிமா, கடந்த வாரம் கமல் முன்னிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சில விஷயங்களை பரிமாறிக்கொண்டார்.

இதையும் படியுங்கள்... கேஜிஎப் நாயகன் யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்ததில் ரசிகர்கள் 3 பேர் பரிதாப பலி

Tap to resize

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்று கூறிய பூர்ணிமா. தன்னை செல்லமாக அனைவரும் பீனிக்ஸ் பூர்ணிமா என அழைப்பதாக கமலிடம் கூறினார். அதுமட்டுமின்றி விஜய் வர்மா - அர்ச்சனா இருவரையும் லவ் ஜோடி போல் சித்தரித்துவருவதையும் போட்டுடைத்தார்.

இதையடுத்து நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்று எலிமினேட் ஆன சக போட்டியாளர்களையும் சந்தித்து உள்ளார் பூர்ணிமா. குறிப்பாக ஜோவிகாவின் தாய் வனிதா விஜயகுமார் இவர்களுக்கு பார்ட்டி ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.

வனிதா ஏற்பாடு செய்த பார்ட்டியில் பூர்ணிமா, நிக்சன், சரவண விக்ரம் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். அவர்களுடன் வனிதா விஜயகுமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது Bully Gang என கிண்டலடிக்கப்பட்ட பூர்ணிமா, ஜோவிகா, நிக்சன் ஆகியோர் தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்து உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் வனிதா தான் இந்த கேங்கின் தலைவரா என கிண்டலடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 4 கோல்டன் குளோப் விருதுகளை தட்டிதூக்கிய கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன் ஹெய்மர்- வெற்றியாளர்களின் முழு பட்டியல் இதோ

Latest Videos

click me!