பூர்ணிமா சென்றதற்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் மாயா, விசித்ரா, அர்ச்சனா, விஜய் வர்மா, மணிச்சந்திரா, விஷ்ணு, தினேஷ் ஆகிய 8 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர். அதில் விஷ்ணு ஏற்கனவே டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று பைனலுக்குள் நேரடியாக நுழைந்துவிட்டதால் இந்த வார எவிக்ஷனில் அவரைத் தவிர எஞ்சியுள்ள 6 பேரும் சிக்கி இருந்தனர். இதில் இருந்து யார் வெளியே போவார்கள் என்கிற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.