பூர்ணிமா வெளியேறியதும்... பிக்பாஸ் வீட்டுக்குள் திடீர் என்ட்ரி கொடுத்த ஸ்கூல் பொண்ணு - ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்

First Published | Jan 5, 2024, 2:00 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது திடீரென ஸ்கூல் டிரெஸ் போட்ட பெண் ஒருவர் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த வாரம் மொத்தமிருந்த 8 போட்டியாளர்களில் பூர்ணிமா ரூ.16 லட்சத்துடன் கூடிய பணப்பெட்டியுடன் வெளியேறியதால் தற்போது அர்ச்சனா, விசித்ரா, மாயா, விஜய் வர்மா, விஷ்ணு, மணி, தினேஷ் ஆகிய 7 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

இவர்களில் விஷ்ணி டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று நேரடியாக பைனலுக்குள் நுழைந்துவிட்டதால் எஞ்சியுள்ள 6 பேருமே இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ளனர். அவர்கள் ஆறு பேரில் இருந்து ஒருவரோ அல்லது இரண்டு நபர்களோ இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆக உள்ளனர். அந்த நபர்கள் யார் என்பதை நாளை வீக் எண்ட் எபிசோடில் கமல்ஹாசன் அறிவிப்பார்.

இதையும் படியுங்கள்...  16 லட்சம் பணப்பெட்டியோடு பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - இத்தனை லட்சமா?

Tap to resize

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா வெளியேறியதும் ஸ்கூல் யூனிபார்பில் பெண் ஒருவர் திடீர் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். இதைப்பார்த்ததும் பிக்பாஸ் போட்டியாளர்களே ஷாக் ஆகிப் போயினர். பின்னர் தான் தாங்கள் சீரியல் புரமோஷனுக்காக வந்திருப்பதாக அவர்கள் கூறியதும் தான் போட்டியாளர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஸ்கூல் யூனிபார்மில் வந்தது வேறுயாருமில்லை, அவர் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சின்ன மருமகள் என்கிற தொடரின் நாயகி ஸ்வேதா தான். அவருடன் அந்த தொடரின் நாயகன் நவீனும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார். அவர் அங்கு சென்றதும் தன்னுடைய நண்பன் விஷ்ணுவிடம் உனக்காகவே பிக்பாஸ் தொடர்ந்து பார்த்து வருவதாக கூறினார். இந்த சின்ன மருமகள் தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்...  சசிகுமார் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை... அஞ்சலி செலுத்த விஜயகாந்தின் நினைவிடத்திற்கு படையெடுத்து வந்த பிரபலங்கள்

Latest Videos

click me!