16 லட்சம் பணப்பெட்டியோடு பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - இத்தனை லட்சமா?

First Published | Jan 5, 2024, 9:33 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் 16 லட்சம் பணப்பெட்டியோடு வெளியே சென்ற பூர்ணிமாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Poornima

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. 95 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று விஷ்ணு நேரடியாக பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து எஞ்சியிருந்த விசித்ரா, தினேஷ், மாயா, பூர்ணிமா, மணி, விஜய் வர்மா, அர்ச்சனா ஆகிய 7 போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்கள் 7 பேருமே இந்த வார நாமினேஷனில் சிக்கி இருந்தனர்.

Bigg Boss Tamil season 7

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி கொண்டுவரப்பட்டது. பணத்தின் மதிப்பு ஏற ஏற இதை யார் எடுக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனிடையே பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார். அவர் 16 லட்சம் தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது ஸ்மார்ட் மூவ் என பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் தொடரும் வசூல் வேட்டை... பாகுபலி 2 சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கி முதலிடம் பிடித்த சலார்

Tap to resize

Poornima Ravi

அதுமட்டுமின்றி இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் அதிகபட்ச தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறிய போட்டியாளர் என்கிற பெருமையையும் பூர்ணிமா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் சிபி ரூ.13 லட்சம் எடுத்ததே அதிகபட்ச தொகையாக இருந்த நிலையில், தற்போது பூர்ணிமா அதை முறியடித்து உள்ளார். பணப்பெட்டியை எடுத்த உடன் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ள பூர்ணிமா, அவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.

poornima Ravi salary

இந்த நிலையில், 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய பூர்ணிமாவுக்கு பிக்பாஸ் வழங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பூர்ணிமாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி பார்த்தால் அவர் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த 96 நாட்களுக்கு அவருக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகமொத்தம் பிக்பாஸில் இருந்து பூர்ணிமாவுக்கு சுமார் 31 லட்சம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் சிவா - பல கோடிகளில் பிசினஸ் ஆனா அயலான்! எவ்வளவு?

Latest Videos

click me!