பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களை மிரட்டும் தொனியில் பேசியுள்ள பிரஜனை நெட்டிசன்கள் பேப்பர் ரெளடி என கிண்டலடித்து வருவதோடு, அவரை விஜய் சேதுபதி கண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர் தான் பிரஜன். இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக தன்னுடைய கணவன் - மனைவியாக வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்துள்ளார்கள் பிரஜன் மற்றும் சாண்ட்ரா. இவர்கள் வந்த போது தாங்கள் கணவன், மனைவியாக இருந்தாலும் தனியாக தான் கேம் ஆடுவோம் என்றெல்லாம் பில்டப் விட்டார்கள். ஆனால் இருவரும் ஒன்றாக தான் கேம் ஆடி வருகிறார்கள். நாளுக்கு நாள் இவர்கள் இருவரின் உண்மை முகம் வெளிவரத் தொடங்கி உள்ளது.
24
மிரட்டும் பிரஜன்
கடந்த வாரம் சுபிக்ஷா மிரட்டும் தொனியில் பேசுவதாக கூறி அவரை டைரக்ட் நாமினேஷன் செய்தார் பிரஜன். ஆனால் தற்போது அவர் வீட்டில் உள்ளவர்களை மிரட்டி வருகிறார். குறிப்பாக விக்கல்ஸ் விக்ரம் நேற்று சாண்ட்ராவை ஒரு வேலை சொல்ல வந்தபோது அவளோட புருஷனா நான் உன்னை எச்சரிக்கிறேன். வேண்டுமென்றால் பிக் பாஸிடம் கதவை திறந்துவிட சொல்கிறேன். நீயும் உன்னோட பொண்டாட்டிய கூட்டிட்டு வந்து கேம் ஆடு என மிரட்டும் தொனியில் பேசினார். அதற்கு விக்கல்ஸ் விக்ரமும் தரமான பதிலடி கொடுத்தார்.
34
பயந்துபோன வியானா
அதேபோல் வியானாவை பற்றி சாண்ட்ராவிடம் பேசுகையில், அவளெல்லாம் ஒரு ஆளு, நீ அவகிட்ட பேசாத, நான் மட்டும் அவளை புடிச்சென்னா, வச்சு ஏறிவிட்ருவேன். கண்டெண்டுக்காக ஆள் அனுப்பிகிட்டு இருக்கா என்று பேசி இருக்கிறார். இதையடுத்து பிக் பாஸ் டீமிடம் பேசிய வியானா, பிரஜனின் நடவடிக்கைகள் சரியில்லை என்றும், அவர் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டதோடு, அவருடன் இந்த வீட்டில் இருக்கவே பயமாக இருப்பதாக கூறினார். இதனால் பிரஜனுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
அதேபோல் சுபிக்ஷாவிடம் பேசும் போது என்கிட்ட ஒழுங்கா பேசுனா நானும் ஒழுங்கா பேசுவேன். நான் ஒரு கண்ணாடி மாதிரி. யாருக்கும் பயப்பட மாட்டேன். நான் ஒன்னும் காமெடியன் கிடையாது, நான் ஹீரோ மெட்டீரியல் என கூறி இருக்கிறார். இப்படி அனைவரையும் மிரட்டி தன்னை ஒரு டான் போல கருதிக் கொள்ளும் பிரஜனை நெட்டிசன்கள் பேப்பர் ரெளடி என கிண்டலடித்து வருகிறார்கள். பிரஜன் விஜய் சேதுபதியின் நண்பன் என்பதால், அவர் இதையெல்லாம் தட்டிக் கேட்பாரா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.