பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன கனிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Nov 15, 2025, 04:21 PM IST

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட கனி இந்த வாரம் எலிமினேட் ஆகி உள்ள நிலையில், அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Kani Thiru Salary

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் கனியும் ஒருவர். இவர் இந்த சீசனில் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். கனியின் எவிக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த சீசனில் முதல் வாரத்தில் இருந்து நாமினேட் ஆகாமல் தப்பித்து வந்த கனி, இந்த வாரம் தான் முதன்முறையாக நாமினேஷனில் சிக்கினார். அதோடு அவர் எலிமினேட் ஆகி வெளியே சென்றிருக்கிறார்.

24
யார் இந்த கனி?

அஜித் நடித்த காதல் கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள் தான் கனி. இவர் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் இயக்குநர் திருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கனி பிக் பாஸூக்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் வின்னராகவும் தேர்வு செய்யப்பட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக கனி கலந்துகொண்ட ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் தான்.

34
கனி ஃபேமிலி

கனிக்கு உடன் பிறந்த சகோதரிகள் இரண்டு பேர். அதில் ஒருவர் விஜயலட்சுமி மற்றொருவர் நிரஞ்சனி. இவர்கள் இருவருமே நடிகைகள் தான். இதில் விஜயலட்சுமி சென்னை 28 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டு இறுதி வரை சென்று அசத்தினார். அதேபோல் நிரஞ்சனி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற திரைப்படத்தில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை நிரஞ்சனி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

44
கனி சம்பளம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் குரூப்பிஸம் என்கிற போர்வைக்குள் சிக்கியதால் ரசிகர்களிடையே நெகடிவிட்டியை சம்பாதித்த கனி, இன்று அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு உள்ளார். கனிக்கு பிக் பாஸ் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கி இருக்கிறார். அதன்படி பார்த்தால் அவர் மொத்தம் தங்கி இருந்த 42 நாட்களுக்கு மொத்தமாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories