பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த சீசனைப் போல் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, பிரவீன், துஷார், கலையரசன், சபரி, திவாகர், விஜே பாரவ்தி, கனி, எஃப் ஜே, அரோரா, ரம்யா ஜோ, விக்கல்ஸ் விக்ரம், கானா வினோத், கெமி, வியானா, சுபிக்ஷா, கம்ருதீன், நந்தினி ஆகிய 20 பேர் போட்டியாளர்களாக களமிறங்கினர்.