பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக எண்ட்ரி கொடுத்துள்ள பிரஜன், சாண்ட்ரா, திவ்யா, அமித் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தொடங்கி, ஒரு மாதத்தை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் நான்கு வாரம் நடைபெற்ற எலிமினேஷனில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகிய நான்கு பேர் எலிமினேட் ஆகினர். இதையடுத்து ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்க நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார் விஜய் சேதுபதி. அவர்கள் உள்ளே வந்ததும் அனைவரையும் டார் டாராக கிழித்தனர். இதனால் ஆட்டம் சற்று சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
24
வைல்டு கார்டு போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதன்முறையாக ஒரு ஜோடியை வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். அவர்கள் வேறுயாருமில்லை பிரஜன் மற்றும் சாண்ட்ரா தான். இவர்கள் இருவரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானார்கள். இவர்களுக்கு திருமணமாகி இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து சீரியல் நடிகை திவ்யா கணேஷும், சீரியல் நடிகர் அமித் பார்கவ்வும் பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தனர். இதில் திவ்யா கணேஷ், சன் டிவியில் தான் நடித்து வந்த அன்னம் சீரியலை விட்டு விலகிவிட்டு பிக் பாஸுக்குள் சென்றார்.
34
வைல்டு கார்டு போட்டியாளர்கள் சம்பளம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்களுக்கு புகழ் கிடைப்பது மட்டுமின்றி சம்பளமும் அதிகளவில் கொடுக்கப்படும். இந்த சீசனில் பெரும்பாலும் புதுமுகங்கள் இருந்ததால், கம்மியான சம்பளமே ஏராளமானோர் பெற்று வந்தனர். ஆனால் அவர்களைவிட வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்தவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சாண்ட்ராவுக்கு மட்டும் தான் கம்மியான சம்பளம், மற்ற அனைவருக்குமே நல்ல சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம்.
சாண்ட்ராவுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். இதற்கு அடுத்தபடியாக திவ்யா கணேஷுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல் அமித் பார்கவுக்கும் ரூ.20 ஆயிரம் ஒருநாள் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வைல்டு கார்டு போட்டியாளர்களிலேயே அதிக சம்பளம் பிரஜனுக்கு தானாம். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இந்த சீசனில் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்குவது பிரஜன் என்பது குறிப்பிடத்தக்கது.