போதும்டா சாமி ஆளவிடுங்க... பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகும் விஜய் சேதுபதி..?

Published : Oct 29, 2025, 01:43 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனை தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அந்நிகழ்ச்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

PREV
14
Bigg Boss Tamil Host Vijay Sethupathi

சர்ச்சை, சண்டை, காதல், நட்பு என அனைத்தும் கலந்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. 100 நாட்கள் வெளியுலக தொடர்பு எதுவும் இன்றி அங்கிருக்கும் சவால்களை போட்டியாளர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் இறுதிவரை சென்று டைட்டில் ஜெயிக்கும் போட்டியாளருக்கு 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். இதுவரை தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது அதன் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது.

24
பிக் பாஸ் தொகுப்பாளர் விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். பின்னர் அரசியல் மற்றும் சினிமாவில் பிசியானதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிக்க, அவருக்கு பதிலாக தொகுப்பாளராக களமிறங்கினார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் 8-வது சீசனை தொகுத்து வழங்கிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. கமல்ஹாசனின் ஸ்டைலில் இருந்து தனித்து இருந்ததால், விஜய் சேதுபதியை ஒரு தொகுப்பாளராக மக்கள் ஏற்றுக் கொண்டனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனை தொகுத்து வழங்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

34
விமர்சிக்கப்படும் விஜய் சேதுபதி

கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் வார வாரம் பேசுகையில் அவர்களின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவாரே தவிர, மற்றபடி வெளியே என்ன நடக்கிறது என்பதை சொல்லவே மாட்டார். ஆனால் விஜய் சேதுபதி, அப்படியே உல்டாவாக செய்து வருகிறார். வெளியே நடப்பதை சொல்லி ஆட்டத்தையே குழப்பிவிடுகிறார். உதாரணத்துக்கு இரண்டாவது வாரத்தில் கானா வினோத் மற்றும் திவாகர் செய்த காமெடி மிகவும் நேச்சுரலாக இருந்தது. அப்படியே விட்டிருந்தால் அந்த காமெடி தொடர்ந்திருக்கும். ஆனால் விஜய் சேதுபதி, அவர்கள் காமெடி வெளியே வைரல் ஆனதாக கூறிவிட, அதன்பின் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை தான் வந்ததே தவிர, காமெடி வரவில்லை.

44
விலகும் விஜய் சேதுபதி?

சில இக்கட்டான சூழல்களை விஜய் சேதுபதியால் கையாள முடியவில்லை என்கிற விமர்சனமும் உள்ளது. அதேபோல் உள்ளே போட்டியாளர்கள் தரக்குறைவாக பேசுவதை கண்டிக்கத் தவறி உள்ளதையும் சுட்டிக் காட்டி வரும் ரசிகர்கள், இந்த சிச்சுவேசன்களை கமல்ஹாசன் சிறப்பாக கையாள்வார் என்றும், தயவு செய்து அவரையே தொகுப்பாளராக கொண்டு வருமாறும் கூறி வருகின்றனர். தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வருவதால் விஜய் சேதுபதியும், இந்நிகழ்ச்சியை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஒரு வேளை அது உறுதியானால் இதுவே விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் கடைசி சீசனாக இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் அவருக்கு பதில் கமல்ஹாசன் வருவாரா அல்லது வேறு நடிகர்கள் வருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories